தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் வெற்றி பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.திருச்சி மாநகர செயலாளர் சீனிவாசன் அறிக்கை.

திருச்சியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற துணை மேருமான ஜெ.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது:-
திருச்சி பஞ்சப்பூரில் நடைபெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர், முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்த மாபெரும் பொதுக்கூட்டம் வெற்றி பெற, அல்லும் பகலும் அயராது உழைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும், பங்கேற்று சிறப்பித்த தலைமை கழக நிர்வாகிகள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பூத் கமிட்டி நிர்வாகிகள், செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள்,பொதுமக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி! நன்றி! நன்றி!. இவ்வாறு தமது அறிக்கையில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

