Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பொன்மலையில் பெண் நடன கலைஞர் தூக்கு மாட்டி தற்கொலை .

0

'- Advertisement -

திருச்சி பொன்மலையில் பெண் நடன கலைஞர் தூக்கு மாட்டி தற்கொலை .

 

திருச்சி செந்தண்ணீர்புரம் முத்துமணி டவுன் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் இவரது மனைவி ஜெயஸ்ரீ (வயது 37) இவர் துபாயில் நடன கலைஞராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 27ந் தேதி துபாயில் இருந்து திருச்சிக்கு திரும்பி விட்டார். இந்த நிலையில் கடந்த 7ந் தேதி இவர் தனது வீட்டில் மின்விசிறியில் துப்பட்டாவில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து பொன்மலை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெய் ஸ்ரீ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பொன்மலை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெய்ஸ்ரீ இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.