மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைய நாம் அனைவரும் ஒன்றாக பாடுபட வேண்டும். திருச்சியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி.
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றினார் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி .
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி பகுதிகளான 42, 45, 46, ஆகிய வார்டு பகுதிகளான பொன்மலை, பொன்மலை மலை அடிவாரம், பொன்னேரிபுரம், காந்திநகர், ஆலத்தூர், ஆகிய வார்டு பகுதிகளை சேர்ந்த சுமார் 45,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இங்கு வசித்து வருகின்றனர் .
இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான 15 வருடத்திற்கு மேல் இங்கு வீடு கட்டி வசித்து வரும் மக்களுக்கு இலவச பட்டா வேண்டி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக பள்ளிகளுத்துறை அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களிடம் கோரிக்கை வைத்து வந்தனர். மேலும் இதனைடுத்து முதற்கட்டமாக 164 பயனாளிகள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு 
8 கோடியே 14 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார்.
மேலும் இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன், மண்டலம் மூன்றின் தலைவர் மு.மதிவாணன் திருச்சி வருவாய் கோட்டாட்ச்சி அலுவலர் சாலைதவவளன், திருச்சி கிழக்கு தாசில்தார் விக்னேஷ், மாமன்ற உறுப்பினர்கள் தர்மராஜ், நீலமேகம், சிவக்குமார், ரமேஷ், சீதாலட்சுமி, அரசு அலுவலர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் தனது உரையில் கூறியதாவது:- சென்னையில் தமிழக முதல்வர் அவர்களுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நான் எனது தாய் வீடான திருவெறும்பூருக்கு செல்கிறேன் என்று கூறிய பொழுது என்ன நிகழ்ச்சி என்று கேட்டார் அப்பொழுது எனது தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இன்று நான் நிறைவேற்ற செல்வதாக கூறினேன். அதற்கு அவர் அவர்கள் மனதில் எத்தனை ஆண்டு காலம் அந்த கனவானது நிறைவேற போகிறது உன்னுடன் சேர்த்து எனது வாழ்த்துக்களையும் அவர்களுக்கு கூறு என்று கூறினார், இந்த நேரத்தில் நாம் நன்றி செலுத்துவது யாருக்கு செலுத்த வேண்டும் என்றால் இந்த பட்டாவினை வழங்குவதற்கு முழுவதுமாக உழைத்த அரசு அதிகாரிகளுக்கு தான் என்றும் மேலும் திருச்சி மாவட்டத்தில் மட்டும் இதுவரை 87 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும் அதில் திருவரம்பூர் தொகுதியில் மட்டும் 14 ஆயிரத்து 800 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியாக உள்ளதாகவும்
எனவே மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைய நாம் அனைவரும் ஒன்றாக பாடுபட வேண்டும் எனவும் எடுத்துரைத்தார்.

