Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுக சார்பில் இவர் போட்டியிட்டால் வெற்றி எளிதாக கிடைக்கும்.

0

'- Advertisement -

தமிழகத்திலேயே மிகவும் புகழ்பெற்ற சட்டமன்ற தொகுதிகளில் ஒன்று ஸ்ரீரங்கம் தொகுதி.மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா தொகுதியில் போட்டியிட்டு வென்றதன் இத்தொகுதி புகழ்பெற்ற தொகுதியாக மாறியது.

அதிமுக தொகுதியான இது கடந்த முறை ஏற்பட்ட எதிர்ப்பு அலையில் திமுக வசம் சென்றது.

ஆனால் இந்த முறை கண்டிப்பாக அதிமுக வெற்றி பெற வேண்டும் எனில் பொதுமக்களிடம் நன்கு அறிமுகமான,எளிதாக பழகக்கூடிய ஒருவர் அதிமுக சார்பில் போட்டியிட வேண்டும் என எதிர்பார்ப்பு வருகிறது.

ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட மணிகண்டம் ஒன்றியம்,மணப்பாறை ஊராட்சி ஒன்றியம் என இத் தொகுதியில் சுமார் 70 ஆயிரம் உடையார் சமுதாய ஓட்டுக்கள் உள்ளது.

அதிமுக மகளிர் அணி இணை செயலாளர் லீமா ரோஸ் மார்ட்டின் உடையார் சமுதாயத்தை சேர்ந்தவர்.மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா போன்று உருவ ஒற்றுமை கொண்டவர்.அனைவரிடமும் அன்பாகவும்,பண்பாகவும் பேசக்கூடியவர்.ஸ்ரீரங்கம் தொகுதி மீண்டும் அதிமுக கோட்டை தான் என்பதை நிரூபிக்க லீமா ரோஸ் இங்க போட்டியிட வேண்டும் என்பதே அதிமுக தொண்டர்களின் விருப்பமாகும்.

மீண்டும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பொறுப்பேற்க தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் உழைத்து வரும் இந்த நேரத்தில் லீமா ரோஸ் போன்று எளிதில் வெற்றி பெறும் வேட்பாளர்களை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே ஸ்ரீரங்கம் தொகுதி தொண்டர்களின் விருப்பமாகும்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.