கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் குவியல்கள்.நடவடிக்கை எடுக்காமல் தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் ஒன்றிணைந்து சாலை மறியல்.திருவெறும்பூர் அதிமுக ஒன்றிய செயலாளர் எஸ் கே டி கார்த்தி அறிக்கை.
திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் SKD கார்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோரின் கவனத்திற்கு
திருவெறும்பூர் ஊராட்சிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சுமார் 10 முதல் 15 நாட்களாக விவசாயிகள் நெல் குவியல்களை குவித்து வாடி வதங்கி காத்து கிடக்கின்றார்கள்… ஆனால் அதிகாரிகளின் மெத்தன போக்கின் காரணமாக வாகனம் இல்லை,வேலை ஆட்கள் பற்றாக்குறை இதை தாண்டி VAO க்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு விளை நிலங்கள் அடங்கல் வழங்காமலும் மற்றும் அப்ரூவல் ஆணை வழங்காமலும் நெல் விற்பனை நிலையம் முழுவதும் எந்தவித பணிகள் நடைபெறாமல் ஸ்தம்பித்து உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா தெரியாதா!!!??? அரசு அதிகாரிகளே மற்றும் திருவெறும்பூர் தொகுதியை கட்டி காவந்து செய்கிறேன் என்று தம்பட்டம் அடித்து கொள்ளும் அமைச்சர் அவர்களே உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளை வாழ வையுங்கள் இல்லை என்றால் 
திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் திருவெறும்பூர் தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைத்து சாலை மறியல் செய்ய நேரிடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என காத்து வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

