10 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்ட ஏற்பாடுகள்:
திருச்சியில் திமுக மாநில மாநாடு பணிகள் தீவிரம்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார்.
திருச்சியில் திமுக மாநில மாநாட்டு பணிகள் நடைபெறுகின்ற திடலை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுச்சியுரை நிகழ்த்தவுள்ள திமுக மாநில மாநாடு திருச்சி சிறுகனூரில் மார்ச் 9-ந் தேதி நடைபெற உள்ளது. திமுக மாநில மாநாட்டின் பணிகள், திமுக முதன்மைச் செயலாளர்,அமைச்சர் கே.என்.நேரு வழிகாட்டுதலில் நடைபெற்று வருகிறது.
திமுக இளைஞரணிச் செயலாளர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெற்றி முழக்கமிடும், திமுக மாநில மாநாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்க உள்ளார்கள்.
திராவிட மாடல் 2.O ஆட்சிக்கு அடித்தளமிடவுள்ள இம்மாநாட்டுப் பணிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வின் போது மாநகரச் செயலாளர் மு.மதிவாணன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

