திருச்சி மன்னார்புரத்தில்
மின் வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம்.
ஏராளமானோர் பங்கேற்பு.
மின்வாரியத்தில் பணி புரியும் பொறியாளர்களுக்கும், அலுவலர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கிட மறு ஆலோசனை வழங்கிட கோரி தமிழ்நாடு மின்வாரிய தொழிற்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மன்னார்புரம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு மாநிலத் துணைத் தலைவர் எஸ்.ரங்கராஜன் தலைமை தாங்கினார்.
பொறியாளர் கழக மாநில செயலாளர் விக்கிரமன்,எம்ப்ளாயீஸ் ஃபெடரேசன் சிவசெல்வம்,இன்ஜினியர் சங்கம் கோவிந்தராஜ்,ஐக்கிய சங்கம் மாநில தலைவர் கண்ணன், டி.என்.பி.இ.ஓ. சங்கம் இருதயராஜ்,அண்ணா தொழிற்சங்கம் அருள் மற்றும் ஞானம் சங்கர் சந்தானகிருஷ்ணன் காதர் உள்பட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.
முடிவில் வட்டத் தலைவர் நடராஜன் நன்றி கூறினார்.

