அடிமனை பிரச்சனை.ஸ்ரீரங்கத்தில் இன்று 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு போராட்டம்.
ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்சனை விவகாரம் தொடர்பாக இன்று ராஜகோபுரம் முன்பு 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து போராட்டம் நடத்தினர்.இதில் அனைத்து கட்சியினரும் பங்கேற்றனர்.
ஸ்ரீரங்கம் (வெள்ளி திருமுத்தம்) பகுதியில் நிலவிவரும் அடிமனை உரிமை பிரச்சனை சம்பந்தமாக சமீபத்தில் வழங்கப்பட்ட திருச்சி நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதை நிறுத்திட வலியுறுத்தியும்,
தமிழக அரசினை ஸ்ரீரங்கம் பொது மக்களின் அடிமனை வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் திருவரங்கம் ராஜகோபுரம் முன்பு 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாநகராட்சி 2 -வது வார்டு கவுன்சிலர் ஜவகர் தலைமை தாங்கினார்.திருவானைக்காவல் அடிமனை உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் மாரி என்கிற பத்மநாதன் முன்னிலை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில
முன்னாள் தலைமை அரசு கொறடா ஆர். மனோகரன்,அதிமுக பகுதி செயலாளர்கள் திருப்பதி, சுந்தர்ராஜன்,திருவரங்கம் பகுதி திமுக செயலாளர் ராம்குமார்,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சரவணன்,காங்கிரஸ் கோட்டத் தலைவர் ஜெயம் கோபி,முன்னாள் கவுன்சிலர் விஜயலட்சுமி, மற்றும் திமுக,அதிமுக,கம்யூனிஸ்ட்,காங்கிரஸ், ம.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள்,
ஸ்ரீரங்கம் பகுதி பொதுமக்கள், திருவானைக்காவல் அடிமனை உரிமையாளர்கள் அனைத்து கட்சியினர், பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொண்டனர்.

