Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாளை முன்னிட்டு பகுதி செயலாளர் வாசுதேவன் ஏற்பாட்டில் அதிமுக மாவட்ட செயலாளர் சீனிவாசன் வழங்கிய நலத்திட்ட நிகழ்ச்சியில் அலட்சியமாக நடந்து கொண்ட வட்ட செயலாளர் மலையப்பன்.

0

'- Advertisement -

.மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி காஜா பேட்டை பகுதி செயலாளர் வாசுதேவன் ஏற்பாட்டின் பேரில் சங்கியாண்டபுரம் தனியார் மண்டபத்தில் மாபெரும் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் தலைமையில் நேற்று சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வில் மாநகர செயலாளர் சீனிவாசனுக்கு வெள்ளி செங்கோல் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கினார் பகுதி செயலாளர் வாசுதேவன்.

 

நிகழ்ச்சியில் அனைவரையும் வரவேற்று பேசி சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் .

 

இந்த நிகழ்வில் பகுதி செயலாளர்கள் சுரேந்தர்,சுரேந்தர்,கலைவாணன்,எம் ஆர் ஆர் முஸ்தபா .நாகநாதர் பாண்டி,எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ரஜினிகாந்த்,நிர்வாகிகள் பாண்டியன் தெரு சந்துரு,டேவிட், ஜான்சன்,நசுருதீன்,கிரெயின் பாலு உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

 

சிறப்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வட்ட செயலாளர் எம்.டி.மலையப்பன் நடந்து கொண்ட விதம் கரும்புள்ளியை ஏற்படுத்தியது.

 

காலை 10 மணி முதல் நலத்திட்டங்கள் வாங்க காத்திருந்த பொதுமக்கள் 11 மணி முதல் மாவட்ட செயலாளரிடம் நலத்திட்ட உதவிகள் நடைபெற்று கொண்டு வெளியில் உணவுக்காக ஒரு மணி நேரத்திற்கு மேலாக லைனில் காத்து நின்றனர்.இதில் முதியவர்கள், குழந்தைகள்,மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் காத்து நின்று கொண்டு இருந்தனர்.

இது குறித்து மாவட்ட செயலாளர் இடம் எடுத்துக் கூறிய உடன் நலத்திட்டங்களை நிர்வாகிகள் வழங்குங்கள் அன்னதானத்தை தொடங்கி வைக்கிறேன் என கீழே இறங்க முற்பட்டார் ஆனால் வட்ட செயலாளர் முனியப்பன் அவர்கள் லைனில் காத்து நின்றால் நிற்கட்டும் நீங்கள் அனைவருக்கும் நலத்திட்டங்கள் கொடுத்துவிட்டு செல்லுங்கள் என கூறி தடுத்துவிட்டார்.இதனால் பொதுமக்கள் குழந்தைகளுடன் பல மணி நேரம் காத்து நின்று உணவை வாங்கி சென்றனர்.

பிறந்தநாள் நிகழ்ச்சியை நல்லபடியாக நடத்தி முடிக்க மாவட்டச் செயலாளர் முயன்றாலும் மலையப்பன் போன்ற வட்ட செயலாளரால் அனைவருக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.