தமிழக பனைததொழிலாளர்கள் மீதான காவல் துறையின் அடக்கு முறையை தடுத்திட வேண்டும். தமிழ்நாடு பனைத்தொழிலாளர்கள் சங்கத்தலைவர் வழக்கறிஞர் திருச்சி பன்னீர்செல்வம் அறிக்கை.
தமிழக அரசுக்கு தமிழ்நாடு பனைத்தொழிலாளர்கள் நலசங்கத்தின் வேண்டுகோள்.
தமிமிழகத்தில் நாடார் சமுதாய மக்களின் 30 சதவீதம் மக்கள் இன்றளவும்பனைமரம் தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். வருடத்தில் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் முடிய 4 மாதங்கள் வரைதான் பனைத்தொழில் செய்ய முடியும். பனைமரத்தில் இருந்து பதநீர் இறக்க தமிழகத்தில் சட்டம் உள்ளது.தமிழக அரசும் பனைத் தொழிலாளர்களுக்கு உரிமமும் வழங்குகிறது .. ஆனால் தமிழக அரசு வழங்கும் லைசென்ஸ்… தமிழக காவல் துறை அதிகாரி களால் மதிக்கப் படுவது இல்லை.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மேல்மட்ட காவல்துறை அதிகாரிகள் ஆணைஎன்று சொல்லி காவல் துறை பல்வேறு அடக்கு முறையில் ஈடுபட்டு வருகின்றனர். பனை தொழிலாளர்களை பதநீர் இறக்க விடாமல் தடுப்பதோடல்லாமல் அவர்கள் மீது விஷக்கள் மற்றும் விஷ சாராயவழக்குகள் பதிவு செய்து நீதிமன்ற உத்தரவு பெற்று ஜாமினில் வெளிவர முடியாதபடி சிறையில் அடைத்து வருகின்றனர்.
தமிழக காவல்துறையின் செயல்பாடுகள் சட்டத்தை மீறியதும் மனித நேயமற்றதும் மனித உரிமை மீறியதும் ஆகும். எனவே காவல் துறையினரை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழக முதல்வர் அவர்கள் தமிழக பாவப்பட்ட பனைத்தொழிலாளர்கள் மீது அக்கறை கொண்டு ..வெல்வோம் ஒன்றாக என்று முழக்கமிட்டு தமிழக பனைததொழிலாளர்கள் மீதான தமிழக காவல் துறையின் அடக்கு முறையை தடுத்திட வேண்டும்.
இவ்வாறு தமிழ்நாடு பனைத்தொழிலாளர்கள் சங்கத்தலைவர் வழக்கறிஞர் திருச்சி ப. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள தனதுஅறிக்கையில் தெரிவித்துள்ளார்.

