ஸ்ரீரங்கத்தில் ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத முதியவர் சாவு.தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்….
திருச்சி ஸ்ரீரங்கத்தில் இன்று
ரெயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத முதியவர் சாவுயார் அவர்? திருச்சி ரயில்வே போலீஸ் விசாரணை
திருச்சி ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் அருகாமையில் இன்று அதிகாலை ரெயிலில் அடிபட்டு முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என உடனடியாக தெரியவில்லை. காவிநிற வேஷ்டியும் வெள்ளை மற்றும் ரோஸ் கலர் கட்டம் போட்ட துண்டும் வெள்ளை ஊதா கலரில் கட்டம் போட்ட ரெடிமேட் சட்டையும் அணிந்து இருந்தார் .
இது பற்றிய தகவல் அறிந்த ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஷாம் ஆலன் சம்பவ இடம் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 
இறந்தவர் குறித்து தகவல் அறிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் : 9080563321,9498109040 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் இந்த விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

