Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநாட்டில் 234 தொகுதி வேட்பாளர்கள் அறிமுகம். அன்று முதல் எங்கள் தேர்தல் பயணத்தை தொடங்க போகிறோம்.சீமான் பேட்டி

0

'- Advertisement -

மாற்றத்தை விரும்பும் மக்களின் மனது திருச்சி ஆலங்குடிவரின் வருகை 21ஆம் தேதி நடைபெறுகிறது இதை ஒட்டி இன்று மாநாட்டு பணிகளை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் நிருடர்களிடம் அவர் கூறியதாவது:-

மற்ற கட்சிகள் மாநாடு போன்று எங்கள் மாநாடு இருக்காது எங்கள் மாநாட்டில் தேர்தல் அறிக்கை என்பது கிடையாது.

எங்கள் ஆட்சி எப்படி இருக்கக் போகிறது என்பதற்கான மாநாடாக தான் இருக்கப் போகிறது.மாற்றத்தை விரும்பும் மாநாடாக இருக்கப்போகிறது.

வணங்குவதற்கு ஆயிரம் கடவுள் இருக்கிறார்கள் வாழ்வதற்கு இந்த ஒரு பூமி உள்ளது இந்த பூமியை காக்க போவது யார் என்பதை உணர்த்துவதற்கான மாநாடு இருக்கப்போகிறது. மாநாட்டின் போது 234 தொகுதி வேட்பாளர்களை அறிமுகம் செய்ய உள்ளேன்.அன்றைய தினம் நான் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறேன் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள போகிறீர்கள்.

அன்று முதல் எங்கள் தேர்தல் பயணத்தை தொடங்க போகிறோம்.

தமிழகத்தில் கடுமையான நிதி நெருக்கடி இருக்கும்போது ஒரே நாளில் 6500 கோடி நிதி ஒதுக்கி மகளிர் உரிமை தொகை மற்றும் கூடுதலாக கோடைகால தொகை கொடுத்தது மிக பெரிய கொடுமையாக பார்க்கிறேன்..

மகளிர் உரிமைத் தொகையை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். தமிழகத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடி வரப்போகிறது.மக்கள் சந்திப்பு பயணத்தை தற்போது நிர்வாகிகள் சந்திப்பு பயணம் என்று விஜய் மாற்றி உள்ளார் என்பதை எப்படி பார்க்கிறீர்கள்?தம்பியை குறை சொல்வது என் வேலையில்லை என்னுடைய வேலையை நான் செய்து கொண்டிருக்கிறேன் அதை நீங்கள் என் தம்பியிடம் தான் கேட்க வேண்டும்.

இந்தியா கூட்டணி வலிமையாக இருப்பதற்கு முக்கிய காரணம் ஸ்டாலின்தான் அவர் இல்லை என்றால் இந்தியா கூட்டணி இல்லை அவர் கொடுத்தது தான் காங்கிரஸ் பத்து தொகுதி. அவர் விலகிவிட்டால் இந்தியா கூட்டணி கிடையாது அதனால் தான் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ஸ்டாலினுக்கு ஆதரித்து பேசுகிறார்கள்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.