Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எங்களுக்கு தேர்தல் பயம் கிடையாது எதிரணியினருக்கு தான் தேர்தல் பயம்.திருச்சியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.

0

'- Advertisement -

திருவெறும்பூர் தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு கோடியே 18 லட்சத்து 53 ஆயிரம் மதிப்பீட்டில் பல்வேறு முடிவுற்ற பணிகளை மக்களுக்கு அர்ப்பணித்தும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வண்ணம் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி .

 

திருவரம்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று வெள்ளிக்கிழமை தனது திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நவல்பட்டு அண்ணா நகர் அரசு பள்ளியில் ரூபாய் 3 லட்சம் மதிப்பீட்டில் புதிய கழிவறை அமைப்பதற்கான பூமி பூஜை மற்றும் நாவல்பட்டு பர்மா காலனியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய சுகாதார வளாகத்தையும் திறந்து வைத்தார் மேலும் நவல்பட்டு பர்மா காலனியில் 3 லட்சம் மதிப்பீட்டில் அரசு துவக்கப் பள்ளியில் புதிய கழிவறை இதேபோல் பழங்கனாங்குடி ஊராட்சியில் 7.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா பூமி பூஜையிலும் கலந்து கொண்டார் .

இதே போல் காந்தலூர் ஊராட்சியில் 7 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பீட்டில் அரசு துவக்கப் பள்ளியில் கட்டி முடிக்கப்பட்ட புதிய சமையலறையை திறந்து வைத்தும், கிருஷ்ண சமுத்திரம் ஊராட்சியில் 16 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய வடிகால் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டியும்,அதே ஊராட்சியில் 7 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய சமையலறையையும் திறந்து வைத்தார். வேங்கூர் ஊராட்சியில் 9 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய சீரனிஅரங்கத்திற்கு அடிக்கல் நாட்டி பல்வேறு முடிவுற்ற பணிகள் மற்றும் புதிய பணிகளுக்கான பூமி பூஜை விழாவிலும் கலந்து கொண்டார் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

இந்நிகழ்களில் திட்ட இயக்குனர் கங்காதரணி, திருவெறும்பூர் தாசில்தார் தனலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்த் மற்றும் அண்ணாதுரை திருவெறும்பூர் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய செயலாளர்கள் கருணாநிதி, கங்காதரன் உட்பட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வினைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எதிரணியினருக்கு தான் தேர்தல் பயம்.மக்களுக்கான நலத்திட்டங்களை சூழ்ச்சி செய்து யார் தடுக்க நினைத்தாலும் அதனை முறியடிப்பார் தமிழக முதல்வர் மு.க . ஸ்டாலின்.

மேலும் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

இன்று (வெள்ளிக்கிழமை) தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், இது வெறும் குட் மார்னிங் அல்ல சூப்பர் குட் மார்னிங் என்று தனது பேச்சை ஆரம்பித்தார்.

ஏறத்தாழ 9,089 பேருக்கு பணி ஆணை வழங்கக்கூடிய நிகழ்வில் மிகப்பெரிய அறிவிப்பை தமிழக முதல்வர் அறிவித்தார்.

தேர்தல் நேரத்தில் மத்திய அரசின் சூழ்ச்சியால் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதை நிறுத்தலாம். இதனால் NDA கூட்டணி வெற்றி பெறலாம் என்ற நினைப்பில் சூழ்ச்சி செய்ய பார்க்கிறார்கள்.

அதையும் சர்ஜிகல் ஸ்டிரைக் என்ற சொல்லக்கூடிய அளவில் அடுத்த இரண்டு மாதத்திற்கு வரவேண்டிய மகளிர் உரிமைத்தொகை 2000 ரூபாயை அவர்கள் நிறுத்த முடிவு செய்தால் , அதையும் சேர்த்து யாரிடம் சொல்லாமல் உடனடியாக 5000 ரூபாயை அறிவித்தார்.

எங்களுக்கு தேர்தல் பயம் கிடையாது எதிரணியினருக்கு தான் தேர்தல் பயம்.மக்களுக்கான நலத்திட்டங்களை சூழ்ச்சி செய்து யார் தடுக்க நினைத்தாலும் அதனை முறியடித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மக்களுக்கான நல பணிகளை செய்வார்.

அமித்ஷா உள்ளிட்டோர் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருகை தர வேண்டும் என முதலமைச்சரும் துணை முதல்வரும் சொல்லியுள்ளார்கள். அவர்களை நாங்கள் வரவேற்கிறோம்.

ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் வந்து சென்றதால் தான் நாங்கள் 40 இடங்களை தக்க வைத்தோம்.

அதேபோல் அவர்கள் அடிக்கடி வந்தால் கடந்த தேர்தலை விட சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் 200 இடங்களை கடந்து வெற்றி பெறுவோம்.

திமுகவுக்கு எதிராக என்.டி.ஏ கூட்டணி ஆர்ப்பாட்டம் நடத்துவது அவர்களின் தேர்தல் ஸ்டெரன்த் காட்டுகிறது என பேட்டியில் தெரிவித்தார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.