Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திமுக ஆட்சியில் விலையற்றத்தால் மக்கள் படும் இன்னல்களை துல்லியமாக எடுத்துக் கூறிய திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன்.

0

'- Advertisement -

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் திமுக ஆட்சியில், கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் படும் இன்னல்களை வீடுதோறும் கொண்டு சேர்க்கும் பொருட்டு திமுக ஆட்சிக்கு எதிராக “விடியா ஆட்சி உங்கள் வீட்டு Bill-லே சாட்சி” என்ற தலைப்பில், (அஇஅதிமுக கனெக்ட் ) AIADMK Connect செயலியை பயன்படுத்தி, கையடக்க பிரிண்டர்கள் மூலமாக முன்னேடுத்து, அதிமுக ஆட்சியில் இருந்த பால் பருப்பு மின்சாரம் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலையை தற்போது நடைபெற்று வரும் திமுக ஆட்சிக் காலத்தில் உள்ளதையும் ஒப்பிட்டு, கடந்த ஐந்தாண்டுகளில் விலைவாசி ஏற்றத்தால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் மற்றும் கூடுதல் சுமைகளால், ஒவ்வொரு வீட்டிற்கும் இந்த திமுக ஆட்சி கொடுத்திருக்கும் (பனிஷ்மென்ட் பில்) Punishment Bill-ஐ இல்லத்தரசிகள் மற்றும் குடும்பத்தினரின் பார்வைக்கு அச்சிடப்பட்ட பேப்பராக, துல்லியமாக எடுத்துக் கொடுத்து அவர்களிடத்தில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Ad banner

இதன் ஒரு இன்று வெள்ளிக்கிழமை பகுதியாக மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் தலைமையில் ஏர்போர்ட் வடக்கு பகுதி செயலாளர் வெங்கட் பிரபு ஏற்பாட்டில் மாநகராட்சிக்கு உட்பட்ட 47வது வார்டு சுப்ரமணியபுரம் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில்

நிர்வாகிகள் சாலையோர தரைக்கடை வியாபாரிகள் மற்றும் வீடுவீடாக சென்று இந்த திமுக ஆட்சி கொடுத்திருக்கும் பனிஸ்மென்ட் பில்லை அஇஅதிமுக கனெக்ட் செயலியை பயன்படுத்தி, கையடக்க பிரிண்டர்கள் மூலமாக இல்லத்தரசிகள் மற்றும் குடும்பத்தினரிடம் அச்சடிக்கப்பட்ட பில்களை எடுத்து தெளிவாக எடுத்துக் கூறி விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்வில் 47 வது வட்ட செயலாளர் செல்லப்பா,இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் லோகநாதன்,எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ரஜினிகாந்த்,வழக்கறிஞர் சேது மாதவன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.