Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி தாராநல்லூரில் கார்களின் கண்ணாடிகளை உடைத்து வரும் போதை கும்பல்.நடவடிக்கை எடுக்குமா காவல்துறை.

0

'- Advertisement -

திருச்சி தாராதல்லூரில்

பாஜக பிரமுகர் கார் கண்ணாடி உடைப்பு.காவல் நிலையத்தில் புகார் .

திருச்சி காந்தி மார்க்கெட் தாராநல்லூர் வசந்தம் நகரில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள குடியிருப்பு வாசிகள் தங்களது கார் மற்றும் இருசக்கர வாகனங்களை வீட்டின் முன்பு சாலை ஓரம் நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் அதே பகுதியை சேர்ந்த முன்னாள் பாஜக பிரமுகர் சம்பத் தனது காரை இரவு வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு தூங்கச் சென்றார்.

பின்னர் காலையில் பார்த்த போது அவரது காரின் கண்ணாடி பாறாங்கல்லால் அடித்து நொறுக்கப்பட்டிருந்தது. இதே போன்று அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மேலும் நான்கு கார்

கண்ணாடிகள் நொறுக்கப்பட்டிருந்தது. இது பற்றி பாதிக்கப்பட்டவர்கள் காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசில் புகார் செய்தனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு அப்பகுதியில் டாட்டா ஏசி வாகனத்தை மர்ம நபர்கள் உடைத்திருந்தனர்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது,

கஞ்சா மற்றும் போதை மாத்திரை, போதை ஊசிக்கு அடிமையான சமூக விரோத கும்பல் இது போன்ற தொடர்ச்சியாக நள்ளிரவு வாகனங்களை உடைத்து வருகின்றனர்.

ஆகவே அப்பகுதியில் இரவு ரோந்தை அதிகப்படுத்தி பொதுமக்களின் உடமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.