திருச்சியில் திமுகவின் 12வது மாநில மாநாட்டிற்கு கால் கோல் விழா.அமைச்சர்கள் கே.என். நேரு மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு.
பிரம்மாண்ட மேடை, பந்தல் அமைக்கும் பணிகள் தொடங்கியது:
திருச்சியில் திமுக மாநில மாநாட்டிற்கு கால் கோல் விழா
அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்பு.
திருச்சி என்றாலே அரசியல் தலைவர்களுக்கு நினைவுக்கு வருவது மாநாடு தான். எந்த ஒரு மாநாடு நடத்தினாலும் திருச்சியில் நடத்தினால் வெற்றி மாநாடாக அமையும் என்பது எழுதப்படாத சட்டமாக இருக்கிறது.மேலும் திருச்சி தமிழகத்தின் மையப் பகுதியாக இருப்பதால் மாநாடு நடத்தினால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் எளிதாக வந்து செல்லவும், போக்குவரத்து வசதியும் சுலபமாக இருக்கும் என்று திருச்சியில் மாநாட்டை அரசியல் கட்சியினர் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருகின்றனர்.பெரிய கட்சி என்றாலும் சின்ன கட்சி என்றாலும் திருச்சியில் மாநாடு நடத்தாத கட்சியை இல்லை என்று சொல்லும் அளவிற்கு அரசியல் கட்சியினர் திருச்சியில் மாநாடு நடத்தி வருகின்றனர். குறிப்பாக 5 ஆண்டுக்கு ஒரு முறை வரும் சட்டமன்ற தேர்தலுக்கு திருச்சியில் மாநாடு நடத்தி தங்களது பலத்தை நிரூபித்து சீட்டு பெறுவது காலம் காலமாகநடந்து வருகிறது என்று சொன்னால் அது மிகை ஆகாது.
சட்டப்பேரவை தேர்தலையொட்டி மார்ச் 8-ம் தேதி ‘ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற தலைப்பில் திருச்சியில் திமுக மாநில மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் மாநாடு கூட்டினால் திமுக-வுக்கு திருப்புமுனையாக அமையும் என்பது அண்ணா, கருணாநிதி காலம் தொட்டே இருக்கும் நம்பிக்கை ஆகும். 1956 மே மாதம், திருச்சியில் நடைபெற்ற திமுக-வின் 2-வது மாநில மாநாட்டில் தான் தேர்தலில் போட்டியிடலாமா, வேண்டாமா என வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, தேர்தல் களத்துக்குள் அடியெடுத்து வைத்தது திமுக. அதுதான் திமுக வரலாற்றில் முதல் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதன்பின், 6-வது மாநில மாநாடு 1990-லும், 8-வது மாநில மாநாடு 1996-லும், 9-வது மாநில மாநாடு 2006-லும், 10-வது மாநில மாநாடு 2014-லும், 11-வது மாநில மாநாடு 2021-லும் திருச்சியில் தான் நடைபெற்றது.
1990-ம் ஆண்டில் 6-வது, 2014-ம் ஆண்டில் 10-வது மாநில மாநாடுகளுக்குப் பிறகு நடைபெற்ற தேர்தல்களில் மட்டும் திமுக வெற்றி பெறவில்லை. மற்ற மாநாடுகளுக்கு பிறகு நடைபெற்ற தேர்தல்களில் திமுக-வே வெற்றி பெற்றதால், திருச்சியில் மாநாடு கூட்டினால் திமுக-வுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்பது அக்கட்சியினரின் நம்பிக்கையாக உள்ளது.
அந்த வகையில், தற்போது திமுக-வின் 12-வது மாநில மாநாடு வரும் மார்ச் 8ந் தேதி திருச்சியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. வரும் சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்கான முன்னோட்டமாகவே திருச்சி மாநாட்டை திமுக அறிவித்துள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.
தி.மு.க. மாநாடு பந்தக்கால் நடும் விழா
தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரம்மாண்ட மாநில மாநாடு மார்ச் 8-ம் தேதி திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நடைபெற உள்ளது.
கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் படி, ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் என்கிற தலைப்பில் மாநாடு மிகப்பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது.
திருச்சி சிறுகனூரில் நடைபெறும் இந்த மாநாட்டில் சுமார் 10 லட்சம் பேர் கலந்து கொள்கின்றனர். தற்போது இதற்கான பிரம்மாண்ட மேடை மற்றும் பிரம்மாண்ட பந்தல் ( சுமார் 650 ஏக்கர் பரப்பளவில் ) அமைக்கும் பணிகள் மற்றும் முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளன.
இந்நிலையில் மாநாட்டுப் பணிகளை தொடங்கும் விதமாக திருச்சி சிறுகனூரில் மாநாடு நடைபெறும் இடத்தில் இன்று பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு, தெற்கு மாவட்ட செயலாளர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் மாநாட்டு பணிகளை இன்று தொடங்கி வைத்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:-
மார்ச் 8 – ந் தேதி திருச்சியில் நடைபெற உள்ள திமுக மாநாடு இதற்கு முன்பு நடந்த மாநாடுகளை காட்டிலும் சிறப்பாக இருக்கும் 500 ஏக்கர் பரப்பளவில் அந்த மாநாடு நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலமைச்சராக்க வேண்டும் என்கிற அடிப்படையில் இந்த மாநாடு சிறப்பாக நடைபெறும்.
ஒரு கட்சித் தலைவர் மற்றொரு கட்சி தலைவரை சென்று சந்திப்பதை இயல்பானது. அதுபோல் தான் கனிமொழி ராகுல் காந்தியை சந்தித்துள்ளார். அவர் எடப்பாடி பழனிச்சாமி போல் முகத்தை கர்சிப்பால் மூடிக்கொண்டு யாரையும் சென்று சந்திக்கவில்லை வெளிப்படையாக சென்று தான் சந்தித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில் மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி,
வடக்கு மாவட்ட செயலாளர். காடுவெட்டி.தியாகராஜன் எம்எல்ஏ,
பெரம்பலூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு,மாநகரச் செயலாளர்கள் மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் கதிரவன்,
பழனியாண்டி, சௌந்தர பாண்டியன்,
மத்திய மாவட்ட துணை செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான முத்து செல்வம்,மத்திய மாவட்டம் முன்னாள் துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர்,பொருளாளர் துரைராஜ்,ஒன்றிய செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா, அந்தநல்லூர் கதிர்வேல்,பகுதி செயலாளர்கள் மோகன்தாஸ்,காஜாமலை விஜய்,நாகராஜன்,கமால் முஸ்தபா,ராம்குமார்,வக்கீல் இளங்கோ,மாநகர அயலக அணி அமைப்பாளர் துபேல் அகமது,வர்த்தகர் அணி அமைப்பாளர் பி.ஆர்.சிங்காரம்,மத்திய மாவட்ட வர்த்தகர் அணி முன்னாள் துணை அமைப்பாளர் தொழிலதிபர் ஜான்சன் குமார்,முன்னாள் பகுதி செயலாளர் தில்லை நகர் கண்ணன்,பொதுக்குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம், திருச்சி மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி,மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் கலந்தர் பஷீர்,
மாவட்ட பிரதிநிதிகள் வக்கீல் மணிவண்ண பாரதி, சோழன் சம்பத்,கவுன்சிலர்கள் கலைச்செல்வி, விஜயா ஜெயராஜ்,புஷ்பராஜ்,ராமதாஸ்,மஞ்சுளா பாலசுப்பிரமணியன்,வட்டச் செயலாளர்கள் புத்தூர் பவுல்ராஜ்,வாமடம் சுரேஷ், பி.ஆர்.பி. பாலசுப்பிரமணியன்,மார்சிங் பேட்டை செல்வராஜ்,தனசேகர்,நிர்வாகிகள் இன்ஜினியர் நித்தியானந்தம்,பந்தல் ராமு,பிராட்டியூர் மணிவேல்,அரவானூர் தர்மராஜன்,
சர்ச்சில்,ரஜினி கிங்,அபூர்வா மணி,எம்.ஆர் எஸ்.குமார்,
தெற்கு மாவட்டம் :
திருச்சி தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர்கள் லீலா வேலு, மூக்கன் செங்குட்டுவன்,முன்னாள் எம்.எல்.ஏ கே என் சேகரன்,நிர்வாகிகள் சபியுல்லா, வண்ணை அரங்கநாதன்,மாநகர அயலக அணி அமைப்பாளர் இன்ஜினியர் இப்ராம்ஷா,
பகுதி செயலாளர்கள் ஏ.எம்.ஜி. விஜயகுமார் கொட்டப்பட்டு தர்மராஜ், பாபு மோகன் மணிவேல் சிவகுமார் நீலமேகம் ராஜ் முகமது, கவுன்சிலர்கள் கே.கே.கே. கார்த்திக் சாதிக் பாட்சா எல்.ஐ.சி சங்கர், சீதாலட்சுமி முருகானந்தம் மற்றும்
மாநில,மாவட்ட, மாநகர கழக
நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய,பகுதி ,நகர,பேரூர்கழக செயலாளர்கள், வட்ட கழக செயலாளர்கள், வட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், மாமன்ற உறுப்பினர்கள், அனைத்து அணியை சேர்ந்த நிர்வாகிகள், கழக மூத்த முன்னோடிகள், செயல்வீரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

