போலீஸ் பூத் அமைக்கப்பட்டதற்கு திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பாக அனைவருக்கும் நன்றி. தலைவர் எம்.கே.எம்.காதர் மைதீன் தெரிவித்துள்ளார்,
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நன்றி :
காந்தி மார்க்கெட் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று போலீஸ் பூத் அமைக்கப்பட்டது.
அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் காவல்துறைக்கு பாராட்டு.
தமிழகத்தின் இதயம் போன்ற திருச்சியின் மையப் பகுதியில் அமைந்துள்ளது காந்தி மார்க்கெட்.இங்கு தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
மிகவும் பழமை வாய்ந்த காந்தி மார்க்கெட் பகுதியில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்பட்டது.இதையடுத்து
கடந்த 05..01..2026. அன்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் போக்குவரத்து நெரிசல் சம்பந்தமாக மணிமண்டப சாலை சந்திப்பில் போலீஸ் பூத் அமைத்து 24 மணி நேரமும் போக்குவரத்து மற்றும் குற்றங்கள் தடுக்கும் வண்ணம் திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் எம்.கே .எம் .காதர் மைதீன் தலைமையில் நிர்வாகிகள் நேரில் சந்தித்து மனு அளித்து இருந்தனர்.
வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடனடியாக திருச்சி மாநகர காவல் ஆணையருக்கு பரிந்துரை கடிதம் கொடுத்தார். அதை அன்றைய தினமே காவல் ஆணையரிடம் திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் காதர் மைதீன் தலைமையில் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
இதன் அடிப்படையில் நேற்று (ஜனவரி 31-ந்தேதி) சனிக்கிழமை இரவு தற்பொழுது காவல் பூத் மணிமண்டப சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
காந்தி மார்க்கெட் ஆய்வாளர் தலைமையில் பொதுமக்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள் நலன் கருதி போலீஸ் பூத் அமைத்து கொடுத்தமைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் திருச்சி மாநகர காவல் ஆணையர் , காந்தி மார்க்கெட் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அனைவருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பாக நன்றியை தெரிவித்து கொள்வதாக கூட்டமைப்பு தலைவர் எம்.கே.எம்.காதர் மைதீன் தெரிவித்துள்ளார்.

