Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் மீது கூறப்பட்ட அவதூறும் மாநகர மாவட்ட செயலாளரின் விளக்கமும்….

0

'- Advertisement -

அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவில் வார்டுகள் பிரிக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்து அறிக்கை வெளியிட்டு இருந்தார்.அதன்படி …

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவில் உள்ள 65 வார்டுகள் வடக்கு, தெற்கு என பிரிக்கப்பட்டு புதிதாக பகுதி செயலாளர்கள்

மற்றும் வட்ட செயலாளர்கள்,

எம்ஜிஆர் மன்றம்,எம்ஜிஆர் இளைஞர் அணி நிர்வாகிகள்,ஜெயலலிதா பேரவை,சிறுபான்மை இலக்கிய அணி நிர்வாகிகளை புதிதாக நியமனம் செய்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து இருந்தார்.

அதன்படி

திருச்சி மாநகர் மாவட்டக் கழக நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு, மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் வட்டங்கள் மறுசீரமைக்கப்பட்டு, கீழ்க்கண்டவாறு பகுதிகளையும், பகுதிகளுக்கு உட்பட்ட வட்டங்களையும் உள்ளடக்கி செயல்படும்.

அதன்படி மலைக்கோட்டை வடக்கு பகுதி :

12, 12A, 13, 13A (4 வட்டங்கள்)

மலைக்கோட்டை தெற்கு பகுதி :

14, 14A, 15, 15A, 158, 17, 17A (7 வட்டங்கள்)

காந்தி மார்க்கெட் பகுதி :

18, 18A, 19, 19A, 198, 20, 20A (7 வட்டங்கள்)

பாலக்கரை பகுதி :

21, 21A, 30, 30A, 308, 31, 31A, 32, 32A, 50, 50A (11 வட்டங்கள்)

காஜாபேட்டை பகுதி :

33, 334, 34, 34A, 49, 49A, 59, 59A (9 வட்டங்கள்)

ஏர்போர்ட் வடக்கு பகுதி :

47, 47A, 48A, 63, 63A (4 வட்டங்கள்)

ஏர்போர்ட் தெற்கு பகுதி :

61, 61A, 64, 644, 65, 65A (6 வட்டங்கள்)

உறையூர் பகுதி :

8, 8A, 9, 9A, 10, 10A, 23, 23A (8 வட்டங்கள்)

தில்லைநகர் பகுதி :

22, 22A, 29, 29A, 51, 51A, 52, 52A (8 வட்டங்கள்)

புத்தூர் பகுதி :

24, 244, 25, 25A, 26, 26A (6 வட்டங்கள்)

ஜங்ஷன் பகுதி :

11, 11A, 27, 27A, 28,. 28A, 54, 54A (8 வட்டங்கள்)

கருமண்டபம் பகுதி :

53, 53A, 55, 55A, 56, 56A, 57, 57A (8 வட்டங்கள்)

காஜாமலை பகுதி :

58, 58A, 60, 60A, 62, 62A (6 வட்டங்கள்)

உட்பட்ட பகுதிகள் மற்றும் வட்டங்கள் மறுசீரமைக்கப்பட்டுபுதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று தெற்கு மாவட்ட அதிமுகவில் வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி

திருவெறும்பூர் பகுதி :

38, 39, 39A, 40, 41 (5 வட்டங்கள்)

பொன்மலை பகுதி :

34B, 35, 35A, 45, 45A, 46, 46A, 48 (8 வட்டங்கள்)

காட்டூர் பகுதி :

37, 38A, 41A, 42A, 43, 43A, (6 வட்டங்கள்)

அரியமங்கலம் பகுதி :

16, 36, 36A, 42, 44, 44A, 448 (7 வட்டங்கள்)

புதிய வட்டங்கள் பிரிக்கப்பட்டு

நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று வடக்கு மாவட்டத்தில் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட வட்டங்கள் மறு சீரமைக்கப்பட்டுபிரிக்கப்பட்ட பட்ட கலக புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திருச்சி மாநகர் மாவட்டம், வடக்கு, தெற்கு மாவட்ட அதிமுகவில் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் இருந்த நிர்வாகிகள் புதிதாக நியமிக்கப்பட்டு இருப்பது அதிமுக நிர்வாகிகள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருந்தது …

இந்த நிலையில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரின் செயல்பாடு சரியில்லை என ஒரு சில நிர்வாகிகள் சிலரை தூண்டிவிட்டு அவருக்கு எதிராக பேட்டி கொடுத்து வந்தனர் இது குறித்து 50வது வட்ட நிர்வாகி கிருஷ்ணன் என்பவரை நாம் சந்தித்து பேசிய போது அவர் கூறியதாவது:-

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து திருச்சி அதிமுக கட்சியில் பணியாற்றி வருகிறேன்.பல மாவட்ட செயலாளர்களுடன் பயணித்து உள்ளேன்.தற்போதைய மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் குறித்து அவதூறு கூறிய எங்கள் வட்ட பகுதியை சேர்ந்த சாந்தி என்ற பெண்மணி அதிமுகவில் தான் உள்ளார் என்பது அவர் பேட்டி அளித்த பின்பு தான் எங்களுக்கே தெரியும் அவர் அதிமுகவை சேர்ந்தவர் என்று .

இது யாரோ தூண்டுதலில் பேரில் நடைபெற்று உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.

மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் பாகுபாடு இல்லாமல் அனைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடமும் எளிமையாக பழகக் கூடியவர்.

 

தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மலைக்கோட்டை பகுதி செயலாளர் சிந்தை முத்துக்குமார்,ஏர்போர்ட் பகுதி செயலாளர் வெங்கட் பிரபு,காஜாமலை பகுதி செயலாளர் சுரேந்தர்,மாணவர் அணி மாவட்ட தலைவர் நாகு ,அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளர் ராஜ்குமார் போன்றவர்கள் எல்லாம் கட்சிக்காகவும்,கட்சி வளர்ச்சிக்காக எவ்வாறு களப்பணி ஆற்றி வருகிறார்கள் என்பது அதிமுக மாநகர் தொண்டர்கள் அனைவரும் அறிந்தது.

மாவட்ட செயலாளர் சீனிவாசன் உள்ள காஜா பேட்டை பகுதியில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட மாவட்ட அளவிலான (தனக்கு  வேண்டிய ரோஜர் , ஓட்டுநர் சதீஷ்,மைத்துனர் போன்றோர்க்கு) பொறுப்பாளர்கள் உள்ளனர் என்பது ஏற்றுக் கொள்ளாத முடியாத தகவல்.

மாவட்ட செயலாளர் பழைய தொண்டர்களை மதிக்கவில்லை இவர் பணத்துக்காக தான் புதிய நிர்வாகிகளை பரிந்துரை செய்து உள்ளார் என அவர் மீது அவதூறு பரப்புவது அந்த ஆண்டவனுக்கே அடுக்காது .மாவட்ட செயலாளருக்கு எதிராக YTube ஜனவரி பேட்டி எடுத்த நபருக்கு மாவட்ட செயலாளர் அனைத்து பல லட்சம் கொடுத்ததாக கூறப்படுவதும் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

தற்போதைய மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தூங்கும் நேரம் தவிர மற்ற நேரம் முழுவதும் கட்சி வளர்ச்சிக்காகவும் தொண்டர்களின் நாலக்காகவும் யோசித்து செயல்பட்டு வருகிறார் என கூறினார்.

 

இதுகுறித்து மாநகர மாவட்ட செயலாளர்,முன்னாள் துணை மேருமான ஜெ.சீனிவாசனிடம் நாம் தொடர்பு கொண்டு பேசிய போது அவர் கூறியதாவது:-

இந்த செய்தியை இத்துடன் விட்டு விடுங்கள். தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக கழகத்தில் எந்த களங்கமும் ஏற்பட்டு விட கூடாது. இது போன்ற அவதூறுகளை கண்டு கொள்ளாமல் அதிமுக தொண்டர்கள் அனைவரும் நேர் வழியில் நேர்மையாக செயல்பட்டு திருச்சியில் அதிமுக சார்பில் யார் போட்டியிட்டாலும் வெற்றி பெற தான் பாடுபட வேண்டுமே தவிர யார் என்ன அவதூறு கூறினாலும் அது குறித்து யோசிக்க வேண்டாம் என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூறியுள்ளார்.அதன்படி செயல்படுவோமே தவிர மற்ற எதுவும் நமக்கு தேவையில்லை என சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.