Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி நீர்உந்து நிலையத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு.

0

'- Advertisement -

திருச்சி நீர்உந்து நிலையத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு.

 

திருச்சி கமரசம்பேட்டை நீர் உந்து நிலையத்தில்

பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தினை பார்வையிட்டு,

புதிதாக இணைக்கப்பட்ட திருச்சி மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் அபிவிருத்தி திட்டம் செயல்படுத்துதல் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று நேரில் ஆய்வு செய்தார்.

திருச்சி மாநகராட்சியுடன் 2011 -ல் சேர்க்கப்பட்ட திருவெறும்பூர் பேரூராட்சி, பாப்பாகுறிச்சி ஊராட்சி, எல்லக்குடி ஊராட்சி, கீழகல்கண்டார் கோட்டை ஊராட்சி மற்றும் ஆலத்தூர் ஊராட்சி, ஆகிய பகுதிகள் அடங்கிய 5 பழைய வார்டு (61, 62, 63, 64 மற்றும் 65) பகுதிவாழ் பொதுமக்களுக்கு நாள் ஒன்றுக்கு, நபர் ஒன்றுக்கு 135 லிட்டர் வீதம் குடிநீர் வழங்குவதற்கு. ஜெர்மானிய வங்கி நிதி உதவியின் கீழ் ரூ.63.70 கோடி மதிப்பீட்டில் பணிகள் எடுத்து கொள்ளப்பட்டு,

தொகுப்பு எண்.1ன் கீழ் காவேரி ஆற்றுப்படுகையில், புதிதாக 6.0மீ விட்டமுள்ள 18.0 மீ ஆழமுள்ள தலைமை நீர்சேகரிப்பு கிணறு கட்டப்பட்டுள்ளது.

மேற்படி நீரேற்று நிலையத்திலிருந்து வார்டு எண்.38, 39, 40, 41, 42, 43 ஆகிய பகுதிவாழ் பொதுமக்களுக்கு 27.27 எம்.எப்.டி. குடிநீர் வழங்கும் 38.00 இலட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி- பாரி நகர் , புகழ் நகர் ( எல்லக்குடி (பழையது) காவேரி நகர் , சந்தோஷ் நகர் ஆலத்தூர் , கணேஷ் நகர் அம்பேத்கர் நகர் மற்றும் பழைய 3 எண்ணிக்கைகள் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளிலிருந்து குடிநீர் வழங்கும் வகையில் 211.711 கி.மீ குடிநீர் விநியோக குழாய்களும், 21.556 கி.மீ பிரதான குடிநீர் உந்துக் குழாய்களும் பதிக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை இத்திட்டத்திற்கு ரூ.64.95 கோடி செலவிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் 19343 வீட்டு குடியிருப்பு குடிநீர் இணைப்புகள் வழங்க வழிவகை செய்யப்பட்டு, 88054 மக்கள் பயன் பெற உள்ளனர்.

இந்நிகழ்வின் போது மாநகர செயலாளர்  மாநகராட்சி சேர்மன் மு.மதிவாணன் மாவட்டத் துணைச் செயலாளர் செங்குட்டுவன் , பகுதி செயலாளர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் நீலமேகம், சிவக்குமார், மாமன்ற உறுப்பினர் தியாஹுதீன், வட்டக் கழக செயலாளர் கயிலை நாதன், புண்ணியமூர்த்தி, ஐ.செல்வராஜ், சிவசக்தி கார்த்தி, தமிழ்மணி, மன்சூர்அலி, மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.