திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்றதால் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் புறக்கணிப்பு?..
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்றதால் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் புறக்கணிப்பு?..
கவர்னர் ஆர்.என்.ரவி பட்டங்கள் வழங்கினார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக 40 -வது பட்டமளிப்பு விழா இன்று பாரதிதாசன் பல்கலைக்கழக 40வது பட்டமளிப்பு விழா அரங்கில் நடந்தது. விழா தொடங்கியவுடன் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதன் பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி கலந்துகொண்டு, பட்டங்கள் வழங்கினார்.
நடப்பாண்டில் 97,598 பட்டதாரி மாணவ மாணவியர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படுகிறது.
இன்றைய விழா அரங்கில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி,
முனைவர் பட்டம் பெறும் 690 மாணவர்கள்,
இளநிலை, முதுகலை, எம்.பில் மாணவ மாணவிகள் மொத்தம் 780 பேருக்கு தனது கரங்களால் பட்டங்கள் வழங்கினார்.
விழாவில் பெங்களூரு தேசிய தர மதிப்பீட்டு நிர்ணயக் குடும்பத்தின் இயக்குனர் கண்ணபிரான், பல்கலைக்கழக துணைவேந்தர் குழு தலைவரும், கல்லூரி கல்வி இயக்கக ஆணையருமான சுந்தரவல்லி, பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) காளிதாசன் மற்றும் ஆட்சி மன்ற உறுப்பினர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.
அழைப்பிதழில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் பெயர் இடம் பெற்று இருந்தது.
ஆனால் அவர் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவில்லை.ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே பனிப்போர் நடந்து வருவதால் உயர்கல்வித்துறை அமைச்சர் இந்த நிகழ்ச்சியை புறக்கணித்தாரா? என நிகழ்ச்சியில் பங்கேற்ற சிலர் பேசி சென்றனர்.

