திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று சனிக்கிழமை காலை நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தந்தை பெரியார் கல்லூரி முன்னாள் மாணவர் சங்க கட்டிட அடிக்கல் விழா திமுக துணை பொது செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர், தொழிற்துறை நிலைக் குழு தலைவர்,முன்னாள்
மாணவர்கள் சங்க புரவலர் திருச்சி சிவா தலைமையில் நடைபெற்றது.
தமிழ் துறை தலைவர் பேராசிரியர் வாசுதேவன் வரவேற்புரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் அங்கம்மாள்,மன்னர் சேதுபதி கல்லூரி முன்னாள் முதல்வர் முஸ்தபா கமால்,சரபோஜி மன்னர் அரசு கல்லூரி முன்னாள் முதல்வர் செல்லப்பா,முன்னாள் மாணவர் சங்க பொது செயலாளர் ராஜலிங்கம்,
கல்லூரி தேர்வு நெறியாளர் தனலட்சுமி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள்,முன்னாள் மாணவர் சங்கம்,ஆசிரியரல்லாப் பணியாளர்கள் மற்றும் மாணவ – மாணவிகள் கலந்து கொண்டனர்.

