எம்ஜிஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்ற மேடை சரிந்து விழுந்தும் மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசனின் சாதுர்த்தியமாக செயல்பாட்டால் வெற்றிகரமாக நடைபெற்றது.
திருச்சியில் எம்ஜிஆரின் 109 பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி அதிமுக மாநகர மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேருமான ஜெ.சீனிவாசன் ஏற்பாட்டில் மாபெரும் பொதுக்கூட்டம் பாலக்கரை பகுதியில் உள்ள பருப்பு கார தெருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மாலையில் நடைபெற்றது .
இக்கூட்டம் நடைபெற இருந்த மேடை எதிர்பாராத விதமாக சரிந்து விழுந்தது.இதில் யாருக்கும் எந்தவித சிறு காயம் கூட ஏற்படவில்லை.ஆனால் பதற்றத்தில் அனைவரும் எழுந்து செல்ல முயன்ற போது மைக்கை வாங்கி பேசிய மாவட்ட செயலாளர் சீனிவாசன் அனைவரும் அமைதியாக அமருங்கள்,யாரும் பதற்றம் அடையத் தேவையில்லை நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறும் என பேசி நிகழ்ச்சிக்கு வந்த நூற்றுக்கு மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் அனைவரையும் இருக்கையில் அமர செய்தார்.பின்னர் வரவேற்பு உரையுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் துரை.செந்தில்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்,முன்னாள் அமைச்சர் மற்றும் அதிமுக மகளிர் அணி இணை செயலாளருமான வி.சரோஜா மற்றும் மாநகர செயலாளர் சீனிவாசன் ஆகியோர் சரிந்த மேடையில் சிறிதும் பதற்றம் இன்றி சிறப்புரை ஆற்றினர்.
சரிந்த மேடையில் நிகழ்ச்சி சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக எந்தவித பிரச்சனையும் இன்றிஅமைதியாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிந்த பின்பு அதிமுக தொண்டர்கள் சிலர் கூறிய போது.. மேடை சரிந்து விழுந்தால் நிகழ்ச்சி நடைபெறாது,இது மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசனுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் என யாரோ சிலர் செய்த சதி வேலையாக இருக்கும் என நினைக்கின்றோம் ஆனால் இதனை மீறி மாநகர மாவட்ட செயலாளர் சாதுர்த்தியமாக அனைவரிடமும் பேசி எடுத்து கூறி நிகழ்ச்சியை சிறப்பாக முடித்துள்ளார் என மாவட்ட செயலாளர் சீனிவாசனை பாராட்டி சென்றனர்.

