நேருவை எதிர்த்துப் போட்டியிட்ட திருச்சி அ.தி.மு.க. நிர்வாகி கருமண்டபம் பத்மநாதன் நீதிமன்றத்தில் இன்று ஆஜர். வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு.
கடந்த 2021ம் ஆண்டு சட் டமன்ற தேர்தலின் போது திருச்சி மேற்கு தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட அமைச்சர் கே.என். நேருவை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக துணை செயலாளரும், முன்னாள் நகர கூட்டுறவு வங்கி தலைவருமான கருமண்ட பம் பத்மநாதன் போட்டியிட்டார்.
அப்போது அவர் திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரச்சார நேரம் முடிந்தவுடன் பிரச்சாரத்தை நிறுத்திவிட்டு தொண்டர்கள் அனைவரும் கடந்து சென்றனர்.பின்னர் அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் பத்மநாதன் அப்பகுதியில் ஒரு டீக்கடையில் நின்று தேனீர் அருந்தி உள்ளனர்
நிர்வாகிகள் கும்பலாக நின்று தேநீர் அருந்தியவை தேர்தல் விதிமுறையை மீறியதாக கூறி பத்மநாதன் மீது எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசார் அப்போது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக திருச்சி ஜெ.எம்.2 நீதிமன்றத்தில்
நடந்து வருகிறது.
இன்று நீதிபதி பரம்வீர் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. இதை அடுத்து பத்மநாதன் நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிபதி அவருக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பாக நடந்த சம்பவம் குறித்து வினா எழுப்பினர். அப்போது பத்மநாதன் ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கு என விளக்கம் அளித்தார்.

அதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்தார்.
பத்மநாதன் சார்பில் அ.தி. மு.க. வக்கீல் முல்லை சுரேஷ் ஆஜரானார்.
அப்போது வழக்கறிஞர்கள் வரகனேரி சசிகுமார், முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன், சின்னத்துரை, உடையான்பட்டி எம் .கண்ணன், நிரஞ்சன், சிவசூர்யா, அருண்குமார், கோப்பு பாபு, கௌசல்யா, சந்திரமோகன், உறையூர் சக்தி கிஷோர் ஆகியோர் உடன் இருந்தனர்.

