திமுக பிரமுகரின் முட்டுக்கட்டையால்
மேலவாழை கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழா நிறுத்தம்.
திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் விவசாயிகள் சங்கம் சார்பில் ஜாதி மத பேதமின்றி அரசியல் கட்சி சார்பின்றி
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை முன்பு சமத்துவ பொங்கல் விழா ஆர்டிஓ தலைமையில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், லால்குடி அருகே மணக்கால், இடையாற்றுமங்கலம் மேலவாழை கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், இந்தாண்டு லால்குடி அருகே மேலவாழை கிராமத்தில் விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று 10 ம் தேதி சமத்துவ பொங்கல் விழா கொண்டாட அனைத்து ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள், கிராமமக்கள் செய்திருந்தனர்.
இந்நிலையில், மேலவாழை கிராமத்தை சேர்ந்த திமுக பிரமுகர் மரிய பிரான்சிஸ் தலைமையில் சிலர் சமத்துவ பொங்கல் நடத்த கிராமமக்கள் விரும்பவில்லை என்று பொய்யான தகவலை லால்குடி காவல் நிலையத்தில் புகாராக கொடுத்துள்ளார். இதனால், மேலவாளை கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட முடியாமல் போனதால் கிராமமக்கள் ஏமாற்றமடைந்தனர்.

இதையடுத்து, மேலவாழை கிராமத்தில் நடைபெற இருந்த சமத்துவ பொங்கல் விழாலை நிறுத்த மரிய பிரான்ஸ்சிஸ் உள்நோக்கத்துடன் பொய்யான தகவலை தெரிவித்து சமத்துவ பொங்கல் விழாவை நிறுத்த முயன்று வருகிறார். ஆதலால், மேலவாளை கிராமத்தில் இன்று 11 ம் தேதி சமத்துவ பொங்கல் விழா நடத்த அனுமதி, பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி, 50 க்கும் மேற்பட்ட கிராமங்கள் நேற்று சனிக்கிழமை அன்று லால்குடி காவல் நிலையத்தில் மனு கொடுத்தனர்.
லால்குடி அருகே மேலவாழை கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழா நடத்த அனுமதி, பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சார்பில்
கிராமமக்கள் காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளனர்.

