வரும் தேர்தலில் நாம் யார் என்பதை நிரூபித்து காட்ட வேண்டும், திருச்சியில் நடந்த மண்டல மாநாட்டில் நமது மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் பி.எல் .ஏ.. ஜெகநாத் மிஸ்ரா.
வருகிற சட்டமன்ற தேர்தலில் நம்முடன் கூட்டணி அமைப்பவர்கள் தான் சட்டமன்றத்தில் அமர முடியும் என திருச்சியில் நடந்த மண்டல மாநாட்டில் நமது மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் பி.எல் .ஏ.. ஜெகநாத் மிஸ்ரா பேசினார்.
மண்டல மாநாடு, நமது மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மண்டல மாநாடு திருச்சி-கரூர் பைபாஸ்ரோடு தாஜ் திருமண மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
மாநாட்டுக்கு மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஆர். சிவக்குமார், மாவட்ட செயலாளர் டைமண்ட் ராஜா முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கட்சியின் நிறுவனத் தலைவர் பிஎல்ஏ.ஜெகநாத்மிஸ்ரா கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
அரசியல் கட்சிகளின் பார்வை
தமிழகத்திலேயே இளைஞர்களை அதிகமாக கொண்ட இயக்கம் நமது கட்சி தான். வருகிற 11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) புதுச்சேரியில் நமது கட்சி சார்பில் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு நாம் யாருடன் கூட்டணி சேர போகிறோமோ, அவர்களே ஆட்சியை பிடிப்பார்கள் என்பதை நிரூபித்து காட்டும் வகையில் அமைய வேண்டும். தற்போது அனைத்து அரசியல் கட்சிகளின் பார்வையும் நமது மக்கள் முன்னேற்றக்கழகம் மீது விழுந்து கொண்டிருக்கிறது.
தொடர்ந்து மதுரை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தேனி மாவட்டங்களில் மாநாடு நடைபெற உள்ளது. நாம் நேதாஜி சுபாஷ்சந்திர போஸை கொள்கை தலைவராக கொண்டு வீறு நடைபோட்டு கொண்டிருக்கிறோம். நேதாஜியை பணயம் வைத்து தான் இந்தியாவின் சுதந்திரம் வாங்கப்பட்டது.
வருங்காலத்தில் ஒலிம்பிக்கில் தமிழக வீரர்-வீராங்கனைகள் சாதிக்கும் வகையில் தமிழக அரசு விளையாட்டுத்துறையை மேம்படுத்தி வருகிறது.
அரசுக்கு உறுதுணையாக இருப்போம்
தமிழக அரசுக்கு நமது கட்சி உறுதுணையாக இருக்கும்.மாநிலத்தின் வருவாயை பெருக்க தமிழ்நாட்டை சுற்றுலா மிகை மாநிலமாக்க வேண்டும். வருகிற தேர்தலில் நாம் அதிகாரத்துக்கு வரும் வகையில் பணியாற்றுவோம். அதிகாரத்தை நோக்கி நகர்ந்தால் தான் நமது மக்களுக்கான முன்னேற்றம் ஏற்படும். 2026-ம் ஆண்டு தேர்தலில் நாம் யாருடன் கூட்ணி அமைக்கிறோமோ, அவர்கள் தான் சட்டமன்றத்தில் அமரமுடியும். அந்தவகையில் நல்லதொரு கூட்டணியை அமைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

மாநாட்டில் மாவட்ட பொருளாளர் நெய் ராஜா, கொள்கை பரப்பு செயலாளர் கொடுமுடி தங்கராஜ், மாநில இளைஞரணி தலைவர் எம்.எஸ்.மணி, கூடலூர் செல்வேந்திரன், மாநில பொறுப்பாளர் பார்மா கணேசன், துணை பொதுச்செயலாளர் பெரிய சேகரன்,மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் கீதாராமநாதன்,ஜெய் சங்கர்சுமதி, முத்து மீனா, தேவி மாநில நிர்வாகிகள் சுரா, ரகுபதி, ஆனந்த்,சுப்ரமணி, கண்ணன், நடராஜன், பாபு, அரசு,மகளிர் அணி நிர்வாகிகள் முத்து மீனா, தேவி மற்றும் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான சமுதாய பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

