Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சாதாரண வாட்ஸ்அப் மெசேஜை ஓபன் செய்த இளைஞரின் வங்கிக் கணக்கில் இருந்து 2 லட்சம் ரூபாய் பணம் பறிபோயுள்ளது. எப்படி ….

0

'- Advertisement -

வாட்ஸ்அப் மெசேஜை ஓபன் செய்த இளைஞரின் வங்கிக் கணக்கில் இருந்து 2 லட்சம் ரூபாய் பணம் பறிபோயுள்ளது.

ஓடிபி தெரிவிக்காத நிலையில், பணம் பறிபோனது எப்படி? சைபர் கொள்ளையர்கள் சிக்குவார்களா?

சர்வ சாதாரணமாக பயன்படுத்தும் வாட்ஸ்அப் சாட் மூலமாக இளைஞரின் போன் ஹேக் செய்யப்பட்டு, பணம் பறிக்கப்பட்ட சம்பவம், சைபர் கிரைம் குற்ற சம்பவங்களில் லேட்டஸ்ட் அப்டேட்டாக பார்க்கப்படுகிறது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மதினா நகரை சேர்ந்தவர் அன்வர் காஜா. (வயது 26 ) இவர் கிருஷ்ணாபுரம் பகுதியில் பைக் வாட்டர் சர்வீஸ் கடையை நடத்தி வருகிறார். இவரது செல்போனுக்கு கடந்த 31ஆம் தேதி நூற்றுக்கணக்கில் எஸ்.எம்.எஸ். வந்துள்ளது. அதைத் தொடர்ந்து பிரபல ஆப்பான குக்கூ எஃப்.எம். (KUKU FM) என்ற பெயரில் வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜ் வந்திருக்கிறது.

எப்போதும்போல நார்மலான மெசேஜ் தானே என்று அன்வர்காஜா அதனை ஓபன் செய்து ஓடிபி-யை பார்க்க மட்டும் செய்துள்ளார். அதை யாரிடமும் தெரிவிக்கவோ, எஸ்எம்எஸ் வழியாக அனுப்பவோ செய்யவில்லை.

 

அதன் பின்னர், எப்போதும் போல் செல்போனைப் பயன்படுத்திக் கொண்டிருந்த அவருக்கு, இரவு 10 மணிக்கு மேல்தான் தனது போன் ஹேக் செய்யப்பட்டு வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2.21 லட்சம் திருடப்பட்டது தெரியவந்துள்ளது.

 

உடனடியாக ஆன்லைனில் புகார் தெரிவித்த காஜா, அதைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைமிலும் புகார் தெரிவித்திருக்கிறார்.

5 கட்டங்களாக அவரது கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட பணம் 3 நபர்களின் அக்கவுன்டிற்கு செலுத்தப்பட்டுள்ளது.

 

மாதக்கணக்கில் தான் சிறுகச் சிறுக சேமித்த பணம் ஒரே நாளில் அபகரிக்கப்பட்டிருப்பது வேதனை அளிப்பதாக அன்வர் காஜா தெரிவித்துள்ளார்.

 

கடையநல்லூரில் அதிக அளவில் இஸ்லாமியர்கள் வாழும் பகுதியில், பிரபல தொழில் நிறுவனங்கள் உள்ள இடத்தில் ஆன்லைன் பணமோசடி நடந்து இருப்பது வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக APK பைலை டவுன்லோட் செய்தால் மட்டுமே அதன் மூலமாக போன் ஹேக் செய்யப்பட்டு பணம் பறிக்கப்படும். ஆனால், வெறுமனே வாட்ஸ்அப் சாட்டை ஓப்பன் செய்ததால் பணம் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் குறித்து ஓரளவு தெரிந்து வைத்து இருக்கும் அன்வர் காஜா போன்ற இளைஞர்களே, சைபர் கிரிமினல்களின் வலையில் விழுந்துள்ளனர். இந்த சூழலில் சாமானிய மக்களின் பணத்திற்கு உரிய பாதுகாப்பு இருக்குமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

இதுபோன்ற சைபர் கிரைம குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.