முதல்வருக்கு நன்றி தெரிவித்து திருச்சி பள்ளிகளில் ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் .
Teachers in Trichy schools celebrated by distributing sweets and expressing their gratitude to the Chief Minister.
தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் திட்டம் அறிவிப்பு :
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து திருச்சி பள்ளிகளில் ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் .
கடந்த 3 தேதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 22 ஆண்டுகளாக போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அறிவித்து ஆசிரியர்கள் அரசு ஊழியர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார்.
இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் உதுமான் அலி கூறியதாவது:
கடந்த 2006-ல் கருணாநிதி பெறுப்பேற்ற உடன் 53 ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி எங்கள் வாழ்வில் ஒளியேற்றி வைத்தார்.
அவரது புதல்வர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2026 -ல் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் 22 ஆண்டுகளாக போராட்டத்திற்கு தீர்வு காணும் விதமாக தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்து ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் ஓய்வுக்கு பிறகு கௌரவமான வாழும் நிலையை உருவாக்கியுள்ளார். அதற்காக ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பாக மணப்பாறை, துறையூர், திருச்சி ஆகிய இடங்களில் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். அன்று மாலை திருச்சிக்கு வருகை புரிந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியை வரவேற்கும் விதமாக திருச்சி விமான நிலையத்தின் நுழைவாயில் பட்டாசு வெடித்து, மாலை அனுவித்து, இனிப்பு வழங்கி எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொண்டோம்.

இன்று பள்ளி திறந்த நிலையில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த அமைச்சர்கள் ஏ.வ.வேலு, தங்கம்தென்னரசு, அன்பில் மகேஷ் பெய்யாமொழி, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் தியாகராஜன் ஆகியோருக்கு தங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டோம்.
நாங்கள் உயிர் வாழும் வரையிலும் நாங்களும் எங்கள் தலைமுறையும் இந்த அரசிற்கு நன்றியோடு இருப்போம் என்றார்.

