வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தல்
சனாதனத்திற்கும், சமத்துவ கூட்டணிக்கும் நடைபெறும் யுத்தம்.
திருச்சியில் நடைபெற்ற வைகோ நடை பயண நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி தலைவர்கள் பேச்சு.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சமத்துவ பயணம் என்கிற தலைப்பில் இன்று முதல் வருகிற 12 ந்தேதி வரை நடைபயணம் மேற்கொள்கிறார்.
இந்த நடை பயணத்தின் தொடக்க விழா இன்று காலை திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை அருகில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சரின் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.
விழாவில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்பி வரவேற்று பேசியதாவது:-
தமிழகத்தில் இயற்கை வளத்தை பாதுகாக்க பாடுபட்டவரும், இரண்டு ஆயுள் காலத்திற்கு நிகராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டவர் நம்முடைய தலைவர்.ஆட்சியிலும் அதிகாரத்திலும் இல்லாத போதும் கொள்கையில் உறுதியாக இருக்கும் தொண்டர்கள் அனைவரையும்ஜாதி மத எல்லையை கடந்து தமிழ் மக்களுக்காக வாழ்ந்து வரும் திராவிட இயக்கத்தின் போர்வாள் வைகோவின் நடைப்பயணத்தில் கலந்து கொள்ளும் வீரர்கள் அனைவரையும் வருக என வரவேற்று இந்த நடைபயணம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.வெல்லட்டும் நடைபயணம். வெல்லட்டும் சமூகம். வெல்லட்டும் சகோதரத்துவம் என்று பேசினார்.
விழாவில் திக. பொருளாளர் துரை சந்திரசேகர் கலந்து கொண்டு பேசும் போது கூறியதாவது:-
வருகின்ற சட்டமன்றத் தேர்தல் ஆரியத்திற்கும், திராவிடத்திற்கும்நடைபெறுகிற போர்.இதில் திராவிடம் தான் வெற்றி பெறும்.திராவிடம் வெற்றி பெற தான் நாம் அனைவரும் இங்கு ஒன்று கூடி உள்ளோம்.மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது 83 வயதில் 60 ஆண்டு கால அரசியல் பயணத்தில் மன வலிமையோடு இந்த நடைபயணத்தை மேற்கொள்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.
நாட்டு மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து கொண்டு இது போன்ற நடைபயணத்தை வைகோ அவர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். வருகின்ற 2026 ஆம் ஆண்டு நமக்கு எல்லாம் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி முதலமைச்சர் மு. க . ஸ்டாலினின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். இந்த நல்லாட்சி தொடர நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என்று பேசினார்.
விழாவில் மக்கள் நீதி மையம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் பேசும்பொழுது :-
ஜனநாயகத்தில் மதம், ஜாதி, மொழி பெயரில் மக்களிடம் பிளவு ஏற்படுத்தி ஆதாயம் தேடும் சக்திகளை புறக்கணிக்கும் வகையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் இந்த நடை பயணம் அமைந்துள்ளது இந்த சமத்துவ நடை பயணம். வாக்கு வங்கிக்காக மக்களிடம் ஒற்றுமையை சீர்குலைத்து பாசிச சக்திகளாக செயல்படுவர்களை நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே சக்தியாக மாறி அதனை எதிர்த்து வெல்ல வேண்டும். அதற்கு இந்த சமத்துவ நடை பயணம் அமைந்துள்ளது என்று பேசினார்.
காதர் மொகிதீன்
அகில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் பேசியதாவது:-
மற்ற மாநிலங்கள் எல்லாம் முன் உதாரணமாக தமிழக முதலமைச்சர் இருந்து வருகிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.
தற்பொழுது 11ஆவது நடை பயணமாக வைகோ இன்று நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
அவருடைய நடை பயணம் வெற்றி பயணமாக அமைய வேண்டும் வரலாற்றில் நிறம் பெற வேண்டும்.மக்களுக்கு நல்லாட்சி நடத்தி வரும் இந்த திராவிட மாறலாம் வரும் சட்டமன்ற தேர்தலில் தொடர வேண்டும்.2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இந்த கூட்டணி வெற்றி பெற்று தொடர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்று பேசினார்.

விழாவில் அமைச்சர்கள் கே.என். நேரு, மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, மெய்ய நாதன்,திமுக மாவட்ட செயலாளர்கள் காடுவெட்டி தியாகராஜன், வைரமணி,திருச்சி மத்திய மாவட்ட நகர செயலாளர் அன்பழகன், மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மதிமுக பொருளாளர் செந்திலதிபன் நன்றி கூறினார்.
விழாவில் மதிமுக துணை பொதுச் செயலாளர் டாக்டர் ரொக்கையா, மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, டிடிசி சேரன், மணவை தமிழ் மாணிக்கம்,உறையூர் பகுதி செயலாளர் ஆசிரியர் முருகன் ஏர்போர்ட் பகுதி செயலாளர் வினோத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

