பல லட்சம் குடும்பங்கள் உள்ள நாங்கள் வரும் சட்டமன்றத் தேர்தலில் இந்தக் கட்சிக்குதான் வாக்களிப்போம்.. திருச்சியில் திருமண அலங்கரிப்பாளர்கள் சங்க மாநிலத் தலைவர் பேட்டி.
எங்களுடைய கோரிக்கையை ஏற்றுக்கொள்பவர்களுக்கு வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்போம். தமிழ்நாடு மாநில திருமண அலங்கரிப்பாளர்கள் சங்க தலைவர் பேட்டி.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் தமிழ்நாடு திருமண அலங்கரிப்பாளர்கள் சங்க நிறுவனர் மற்றும் மாநில தலைவர் பாலமுருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது:-
தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் திருவிழாவை சிறப்பாக கொண்டாடும் விதமாக தலா ரூபாய் 5000 வழங்கப்படும் வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
திருமண அலங்கரிப்பாளர்கள் சங்கத்தில் தமிழகம் முழுவதும் பல லட்சம் குடும்பங்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர், இவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும்.
தொழிலாளர் நல வாரியத்தில் எங்கள் தொழில் சார்ந்த ஒரு நபரை தலைவராக நியமிக்க வேண்டும். கடும் போட்டியில் சிக்கித் தவிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் வாழ்வாதாரத்தை காத்திட ஆட்டோ கட்டினத்தை உயர்த்த வேண்டும் மற்றும் தனியார் ஆட்டோ நிறுவனங்கள் தமிழகம் முழுவதும் தடை செய்திட வேண்டும்.
தொழிலாளர்கள் அனைவருக்கும் பணியின் போது ஏற்படும் விபத்துக்கள் மற்றும் உரிய நிவாரணமாக காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சமும், உயிரிழப்பிற்கு ரூபாய் 10 லட்சமும் வழங்க வேண்டும்.
மேலும் சிறு மற்றும் குரு தொழில் செய்யும் நிறுவனங்கள் மற்றும் பொருள் பாதுகாப்பு குடோன்கள் கோடை காலங்களில் அவர்களுக்கு ஏற்படும் தீ விபத்துகள் வாழ்வாதாரம் காத்திட உரிய நிவாரணம் வழங்க வேண்டும் மற்றும் அவர்களுக்கு மீண்டும் தொழில் துவங்க வட்டி இல்லா கடன் தொகை வழங்க வேண்டும்.
குறிப்பாக எங்களுடைய கோரிக்கைகளை ஏற்கும் அரசியல் கட்சிக்கு வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் எங்கள் தொழில் சங்கம் முழு ஆதரவு தருகிறது எனக் கூறினார். பாலமுருகன்.
இந்த மாநில பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

