வரும் 2026 ஜனவரி 16ந் தேதி புனித மிராஜ் இரவு :
திருச்சி அரசு டவுன் காஜி அறிவிப்பு.
திருச்சி மாவட்ட ஹிலால் கமிட்டி தலைவரும், திருச்சி மாவட்ட அரசு டவுன் காஜி ஜலீல் சுல்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த 21 ந்தேதி மாலை தமிழகத்தில் மிகுதியான பகுதிகளிலும் அதன் சுற்றுப்புறங்களிலும், மற்ற மாவட்டங்களிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் ரஜப் மாத முதல் பிறை தென்பட்டதால் ரஜப் மாத முதல் பிறை தொடங்கி உள்ளது , 
மேலும் இன்ஷா அல்லாஹ் வருகிற 2026ம் ஆண்டு ஜனவரி 16ந் தேதி வெள்ளிகிழமை மாலை புனித மிராஜ் இரவு எனவும் அறிவித்துள்ளார்.
எனவே இஸ்லாமிய மக்கள் அனைவரும் சுன்னதான வணக்கங்களும் அதிகமாக செய்து உணவு அபிவிருத்திக்காகவும் நபி காட்டிய அனைத்து வழியிலும் பின்பற்றி, நம் சகோதர சமுதாய மக்களுடன் ஒற்றுமையுடனும் மத நல்லிணக்கத்துடனும் இணைந்து வாழ இறைவனிடம் அல்லாஹூம்ம பாரிக்லனா பி(f)ரஜப வ ஷாபான் வ பல்லிகனா ரமலான் பிரார்த்தனை செய்யக் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் டவுன் காஜி ஜலீல் சுல்தான் தெரிவித்துள்ளார்.

