Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கம்.

0

'- Advertisement -

தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் பல்வேறு மண்டலப் போக்குவரத்துக் கழகங்களின் (TNSTC) கீழ் இயங்கும் பேருந்துகளில், வழக்கமாக இடம்பெறும் ‘தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்’ என்ற வாசகத்தில் இருந்து ‘தமிழ்நாடு’ என்ற சொல் நீக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

விழுப்புரம் மண்டலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கும் அரசுப் பேருந்துகளின் முகப்பு கண்ணாடி, பக்கவாட்டுப் பகுதிகள் மற்றும் பின்புறத்தில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்களில் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் விடுபட்டுள்ளது. அதற்குப் பதிலாக ‘அரசுப் போக்குவரத்துக் கழகம்’ என்று மட்டுமே அச்சிடப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே பணிமனைகளுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இந்த புதிய நடைமுறை பின்பற்றப்படுவதாகத் தொழிலாளர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

 

இந்த மாற்றத்திற்குத் தமிழ் உணர்வாளர்கள் மற்றும் பல்வேறு அரசியல் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

 

திங்கட்கிழமை அன்று காஞ்சிபுரத்தில் இந்தப் பெயர் மாற்றத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கடந்த சில நாட்களுக்கு முன் ஓசூர் மற்றும் சேலத்திலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

 

போராட்டக்காரர்கள் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் விடுபட்ட பேருந்துகளை மறித்து, தாங்களாகவே அந்தப் பெயர் கொண்ட ஸ்டிக்கர்களைப் பேருந்துகளில் ஒட்டித் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். “கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் அந்தந்த மாநிலப் பெயர்கள் தெளிவாகக் குறிப்பிடப்படும் போது, தமிழகத்தில் மட்டும் பல ஆண்டுகளாக இருந்த நடைமுறையை ஏன் மாற்ற வேண்டும்?” எனப் போராட்டக்காரர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், தமிழக அரசு திட்டமிட்டே இந்தப் பெயரை நீக்கியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.