Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

விவசாயிகளின் ஓட்டு யாருக்கு ?தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் அய்யாகண்ணு அறிவிப்பு.

0

'- Advertisement -

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும் கட்சிக்கே வாக்களிப்போம் .

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

இன்று அண்ணாமலை நகரில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

 

ஆலோசனை கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார் .

துணைத் தலைவர் மேகராஜன் முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில்

பிரதமர் மோடி தேர்தலின் போது கூறியபடி விவசாயிகளுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.

தமிழக அரசு வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் போட்டு ரூ. 42 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது ஆனால் விவசாயிகளுக்கு அதில் 4500 கோடி மட்டுமே கிடைக்கிறது. 60% பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் கல்வி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட

கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மற்றும் டெல்லியில் மார்ச் மாதங்களில் சென்று போராட்டம் நடத்துவது , மேலும் வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன் விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்யும் கட்சிக்கு தான் விவசாயிகள் வாக்கு எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் தட்சிணாமூர்த்தி பரமசிவம் தியாகு கணேசன் பரமசிவம் உத்தண்டன் தியாகராஜன் நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.