Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 6 தேதிக்குள் முதல்வர் நல்ல செய்தியை அறிவிப்பார். அமைச்சர் மகேஷ்

0

'- Advertisement -

.பள்ளி விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை:

பொங்கல் பரிசு குறித்தும் விரைவில் நல்ல அறிவிப்பு வரும் :

அரசு ஊழியர்களுக்கு ஜன 6 -தேதிக்குள் முதல்வர் நல்ல செய்தியை அறிவிப்பார்

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி திருச்சி தெற்கு மாவட்டம்,கிழக்கு மாநகரம் கல்வியாளர் அணி சார்பில் சிறந்த கல்வியாளர் சாதனை விருது வழங்கும் விழா திருச்சியில் இன்று நடந்தது.மாவட்டத் தலைவர் தென்ன லீஸ்வரன் வரவேற்றார்.மாவட்ட அமைப்பாளர் குணசீலன், மாநகர அமைப்பாளர் பொன்முடி ஆகியோர் தலைமை தாங்கினர்.சிறப்பு அழைப்பாளர்களாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,கல்வியாளர் அணி மாநில செயலாளர் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.மாநகர திமுக செயலாளர் மதிவாணன்,

கவிஞர் சல்மா எம்.பி.ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.கூட்டத்தில் கல்வியாளர் அணியை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.முடிவில் பேராசிரியர். ஆநிறைச்செல்வன் நன்றி கூறினார்.

பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பள்ளி விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது. விடுமுறை என்பது மாணவர்களின் புத்துணர்ச்சிக்காக தான். மாணவர்கள் மன அழுத்தம் ஏற்படுத்தி விடக்கூடாது.

தனியார் பள்ளிகள் அதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

கல்வி நிதியை பெற வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் நம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். மத்திய அரசு கல்வியில் 20 நோக்கத்தை அடைய வேண்டும் எனக் கூறுகிறார்கள். அதை நாம் 19 அடைந்து விட்டோம்.

கேரளா இருபதையும் அடைந்து விட்டது .

ஆனால் இந்த இரு மாநிலங்களுக்கு தான் கல்வி நிதியை ஒதுக்காமல் வஞ்சித்து வருகிறார்கள். கல்வியிலும் அரசியல் செய்வது வேதனையாக உள்ளது. இருந்த போதும் முதலமைச்சர் கல்விக்கான நிதி நெருக்கடி ஏற்பட்டாலும் அதை வழங்கி வருகிறார்கள்.

பொங்கல் பரிசு தொகுப்பில் 5000 வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்துள்ளார் இது குறித்து தமிழக முதலமைச்சர் முடிவெடுப்பார். நிச்சயமாக ஒரு நல்ல முடிவு எடுப்பார்.

அரசு பள்ளிகளில் டெண்டர் விடுவது நடைமுறையில் உள்ளது.

விரைவில் டெண்டர் விடப்படும் தனியார் பள்ளிகளில் சிசிடிவி கேமரா அமைப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளோம்.

ஜாக்டோ ஜியோ ஜனவரி 6 – ந் தேதி முதல் கால வரையற்ற போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்கள் .

நேற்று இது குறித்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

ஆனால் அவர்கள் போராட்டம் நடத்துவதில் உறுதியாக உள்ளார்கள் .

ஜனவரி 6-ந் தேதிக்குள் அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தியை நிச்சயமாக முதல்வர் தெரிவிப்பார்.

மத்திய அரசு நமக்கான நிதிகொடுப்பதில்லை என்பதை அவர்களிடம் தெளிவாக கூறியுள்ளோம். இருந்த போது அவர்களுக்காக நல்ல செய்தி நிச்சயம் வரும்.

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்

 

 

தொடர்ந்து,

தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்த பியூஸ் கோயல் வந்துள்ளார். அந்த கூட்டணி பலப்பட்டால் திமுகவிற்கு சவாலாக இருக்குமா என்கிற கேள்விக்கு எங்களுக்கு போட்டியே திராவிட மாடல் 2.0-வில் நாங்கள் மேற்கொள்ள உள்ள திட்டங்கள் தான் தற்போது மேற்கொள்ளும் திட்டங்களை காட்டிலும் அதில் இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் போட்டியே என்றார்.பின்னர் திருச்சி – தஞ்சை சாலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்…

 

திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்துவது, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து செந்தணீர்புரம் வரை உய்யக்கொண்டான் ஆற்றங்கரையில் புதிய தார் சாலை அமைத்து கூடுதலாக மாற்று சாலைகளை உருவாக்குவது, சாலையை கடந்து செல்பவர்களுக்கு ஏதுவாக நடைபாதை சிக்னல் அமைப்பது, வெளிச்சம் குறைவான பகுதிகளில் சாலை விபத்துகளை தடுக்க கூடுதல் மின் விளக்குகளை அமைப்பது, கடந்த ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மின்விளக்குகள் பழுதடைந்துள்ளது அவற்றை புதுப்பிப்பது, போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் பகல் வேலைகளில் கனரக வாகனங்களை துவாக்குடியில் இருந்து மாநகர சுற்றுச்சாலை வழியாக திருப்பி விடுவது, பால்பண்ணையில் உள்ள இரட்டை வாய்க்கால் பாலத்தின் அருகே இருசக்கர வாகனங்கள் செல்லும் வகையில் தற்காலிக இரும்பு பாலம் அமைத்துக் கொடுப்பது உள்ளிட்ட அம்சங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என அமைச்சர் தெரிவித்தார்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.