Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அகில இந்திய குயவர் உரிமைக் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திப்பது என தீர்மானம்.

0

'- Advertisement -

அகில இந்திய குயவர் உரிமைக் கட்சி அனைத்து குயவர்கள் நல சங்கத்தின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திருச்சி மாநகர மாவட்ட தலைவர் ரத்தினகிரி கூட்டத்திற்கு வருகை புரிந்த அனைவரையும் வரவேற்று பேசினார்.

அகில இந்திய குயவர் உரிமை கட்சி மாநில தலைவர் சாலை செல்வமணி தலைமை தாங்கினார்.

தேசியத் தலைவர் சாலை சாதியன், சமூக நீதிப் பேரவை தலைவர் ரவிக்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தின் முடிவில் மாநில வழக்கறிஞர் அணி தலைவர்  ராஜ்மோகன் அனைவருக்கும் நன்றி கூறி உரையாற்றினார்.

கூட்டத்தில் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் சௌந்தரராஜன், ராதா, குருசாமி, சுப்புராஜ், சுரேஷ், ராஜசேகர், முருகதாஸ், சென்பகமூர்த்தி, அர்ஜுனன், கௌரி, முருகேசன், வனராஜா, பிரியா, சதீஷ்குமார், பொன்னர், கண்ணன், ராஜ்குமார், சாலை செல்வமுத்து, ஆனந்தம், நரேஷ், மணி, ராஜலட்சுமி, பானுமதி, சாலை அலங்காரம், சந்தோஷ் குமார், துரைமுருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்,

 

கூட்டத்தில் மாநகர மாவட்ட துணைத் தலைவர் மணிகண்டன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,

 

மேலும் வருகிற பிப்ரவரி மாதம் மாநில மாநாட்டை சிறப்பாக நடத்துவது, குயவர் சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மண் எடுக்கும் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் ,

அரசு வேலைவாய்ப்பு கல்வியில் 7.5% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட 11 கோரிக்கைகள் குரு மணந்தாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இக் கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிகளுடன் இணைந்து வரும் சட்டமன்ற தேர்தலை சந்திப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.