Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

3 கோடி டேர்ம் இன்சூரன்ஸ் பணத்திற்காக தந்தையை நூதன முறையில் கொன்று 3 மாதத்துக்குப் பின் சிக்கிய மகன்கள்..

0

'- Advertisement -

சென்னை திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை நல்லதண்ணீர்குளம் தெருவைச் சேர்ந்த கணேசன் அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளராக இருக்கிறார்.

இவர் பாம்பு கடித்து உயிரிழந்த விவகாரத்தில், திடீர் திருப்பமாக அவரது 2 மகன்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசு வேலை, 3 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் பணத்திற்காக பெற்ற மகன்களே, கட்டு விரியன் பாம்பை விட்டு தந்தையை கடிக்க வைத்தது போலீசாரின் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

இன்றைக்கு டேர்ம் இன்சூரன்ஸ் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. பலரும் டேர்ம் இன்சூரன்ஸ் எடுக்கிறார்கள். அதேபோல் எல்ஐசியிலும் பாலிசி எடுக்கிறார்கள். அவர்களில் பலர் கோடிகளில் தான் இப்போது பாலிசி எடுக்கிறார்கள். எதிர்பாராத நிலையில் தவறிவிட்டால், கடன் சுமை மற்றும் பிரச்சனைகளை கையாளவும், தங்கள் காலத்திற்கு பிறகு தனது பிள்ளைகள், மனைவி நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த டேர்ம் இன்சூரன்ஸை எடுக்கிறார்கள்.

இந்த டேர்ம் இன்சூரன்ஸை பொறுத்தவரை இயற்கையான மரணம் அல்லது விபத்து, உடல்நலக்குறைவுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் பாம்பு கடித்து இறந்தாலும், டேர்ம் இன்சூரன்ஸ் கிடைக்கும். ஆனால் இன்சூரன்ஸ் பணத்திற்காகவே கொலை செய்யும் சம்பவங்கள் நடப்பதால் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் போலீஸ் விசாரணை அறிக்கைக்கு பின்னரே காப்பீடு பணத்தை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தருகின்றன.

காப்பீடு நிறுவனங்களுக்கு சந்தேகம் இல்லை என்றால், எளிதாக பணம் கிடைத்துவிடும். ஆனால் சந்தேகம் வந்தால் அவ்வளவு எளிதாக காப்பீடு பணத்தை வாங்கிவிட முடியாது. ஏனெனில் மோசடிகள் நடப்பதால், அவர்கள் விதிமுறைகளை கடுமையாக்கி உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த சம்பவம் இது….

 

திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை நல்லதண்ணீர்குளம் தெருவைச் சேர்ந்த கணேசன் (வயது 56) என்பவர் அதே ஊரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்து வந்து உள்ளார்.

கணேசன், கடந்த அக்டோபர் மாதம் 22-ந் தேதி காலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, பாம்பு கடித்து இறந்ததாக பொதட்டூர் பேட்டை போலீசில் அவரது மகன் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆனால் கணசேனின் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் ஒரு பதிலை கூறியிருக்கிறார்கள். பாம்பு கடித்து இறந்தவர் எப்படி இறந்தார் என்பது குறித்து கணேசன் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் முன்னுக்கு பின் முரணாக கூறியதை கண்ட போலீசாருக்கு சந்தேகம் அடைந்தனர். இதனிடையே இன்சூரன்ஸ் நிறுவனத்திற்குமே சந்தேகம் வந்து உள்ளது. இதையடுத்து தீர விசாரித்து உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் என்று இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் வடக்கு மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க்கிடம் புகார் அளிக்கப்பட்டது.

 

அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், கணேசன் சுமார் 3 கோடிக்கு டேர்ம் இன்சூரன்ஸ் எடுத்து இருந்தது தெரியவந்தது. அதனை பெறுவதற்காக, கணேசனின் மகன்கள் மோகன்ராஜ், ஹரிஹரன் ஆகியோர் மணவூரை சேர்ந்த பாலாஜி (வயது 28), பிரசாந்த் (வயது 35), நவீன் குமார் (வயது 28), ராணிப்பேட்டை மாவட்டம் மோசூர் கிராமத்தைச் சேர்ந்த தினகரன் (வயது 28) ஆகியோருடன் சேர்ந்து தங்களது தந்தையின் கழுத்தில் கட்டுவிரியன் பாம்பை கடிக்க வைத்து கொலை செய்தது தொடர்ந்து நடைபெற்று வந்த விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

 

இதனையடுத்து மோகன்ராஜ், ஹரிகரன் மற்றும் பாலாஜி, பிரசாந்த், நவீன் குமார், தினகரன் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். தந்தையின் காப்பீடு பணம் மற்றும் அரசுவேலைக்கு ஆசைப்பட்டு இப்படி தவறான செயலால் தந்தையை பறிகொடுத்தது மட்டுமின்றி, வாழ்நாள் முழுக்க இனி கம்பி எண்ண போகிறார்கள். யாரும் இதுபோன்ற முட்டாள்தனங்களை செய்ய வேண்டாம். அப்படி செய்தால் கண்டிப்பாக காப்பீடு நிறுவனம் கண்டுபிடிக்கும். போலீசும் கண்டிப்பாக விசாரணையில் சிச்சி கடைசியில் கம்பி தான் எண்ண வேண்டியதிருக்கும்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.