பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு அஞ்சல் தலை :மோடி, சி.பி.இராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு அஞ்சல் தலை வெளியீட்டு விழா குழு தலைவர், முத்தரையர் அரசியல் களம் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.பி.எம்.ராஜா நன்றி .
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு அஞ்சல் தலை வெளியிட்ட
மத்திய பாஜக அரசுக்கு அனைத்து முத்தரையர்கள் சார்பில் நன்றி. அஞ்சல் தலை வெளியிட்டுக் குழு தலைவரும்,முத்தரையர் அரசியல் தலைமை ஒருங்கிணைப்பாளருமான திருச்சி
கே.பி .எம்.ராஜா மகிழ்ச்சி.
அஞ்சல் தலை வெளியிட்டுக் குழு தலைவரும்,முத்தரையர் அரசியல் தலைமை ஒருங்கிணைப்பாளருமான திருச்சி
கே.பி .எம்.ராஜா டெல்லியில் நடைபெற்ற பெரும்பிடுகு முத்தரையர் தபால் தலை வெளியிட்டு விழாவில் கலந்துகொண்டு திரும்பிய திருச்சியில் கூறியதாவது:-
மன்னர்களில் மாமன்னராக திகழ்ந்தவர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர். தமிழகத்தில் பொற்கால ஆட்சியை வழங்கிய மன்னர்களில் தலைசிறந்தவராக போற்றப்படும் எங்கள் குலச் சாமியின் ஆட்சி முறையை, தமிழ் இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டை, வீரத்தை உலகுக்கு பறை சாற்றும் வகையில் மத்திய அரசு அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என நாடாண்ட முத்தரையர் சமூகம் நீண்ட நாட்களாக நான் எனது சமுதாயம் சார்பாக கோரிக்கை விடுத்து வந்துள்ளேன்.
அதைத் தொடர்ந்து பேரரசரின் 1350-வது சதய விழாவையொட்டி பிரதமர் மோடியின் ஆலோசனைப்படி டெல்லி குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் பேரரசரின் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன் மாறன் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

இந்த
வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு எனது வாழ்நாளில் மறக்க முடியாத நல்ல நிகழ்வாக என் மனசெல்லாம் நிறைந்து உள்ளது.
எங்கள் குலசாமியின் அஞ்சல் தலையை வெளியிட்டு துணை குடியரசு தலைவர் சி.பி. ராதா கிருஷ்ணன் சிறப்புரையாற்று கையில், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் சாதனைகளை பட்டியலிட்டதோடு, பேரரசருக்கு அஞ்சல் தலை வெளியிட்டதன் மூலம் உலகமெங்கும் உள்ள முத்தரையர் மட்டுமின்றி தமிழர்கள் அனைவரும் பெருமை கொள்வதாக புகழாரம் சூட்டினார்.
அஞ்சல் தலை வெளியீட்டு குழு தலைவராக மேதகு துணை குடியரசுத் தலைவருக்கு நன்றியை அனைத்து முத்தரையர் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.
முத்தரையர்களின் பன்னெடுங்கால கோரிக்கையை ஏற்று அஞ்சல் தலை வெளியிட்ட பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும், பேரரசருக்கு தபால்தலை வெளியிட வலியுறுத்திய
அனைத்து நல் உள்ளங்களுக்கும் உலகெங்கிலும் வாழும் வீர முத்தரையர் சார்பில் கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். என கே பி எம் ராஜா விழா குழு சார்பில் கூறியுள்ளார்.
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் ஸ்வரன் மாறன் அவர்களுக்கு அஞ்சல் தலை வெளியிட போராடியது குறித்தும் ,அஞ்சல் தலை வெளியிட பரிந்துரை செய்த மோடி மற்றும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தும் விரைவில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பத்திரிகையாளர்களையும் சந்திக்க உள்ளதாகவும்
கே பி எம் ராஜா தெரிவித்துள்ளார்.

