Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மண்ணச்சநல்லூர் தொகுதியில் போட்டியிட வேண்டி திருச்சி வடக்கு மாவட்டம் மாணவர் அணி செயலாளர் அறிவழகன் விருப்ப மனு .

0

'- Advertisement -

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவித்திருந்தார்.அதன்படி இந்த விருப்ப மனு கடந்த டிசம்பர் 15-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை நடக்கிறது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் போட்டியிட விரும்புகிறவர்கள் விருப்ப மனுக்களை சென்றனர்.

 

இதனைத் தொடர்ந்து அஇஅதிமுக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர்,

முன்னாள் முதலமைச்சர், எடப்பாடி அவர்கள்,

மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வேண்டி

திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் மாணவர் அணி செயலாளரும்,

திருப்பஞ்ஞீலி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவரும்,

மண்ணச்சநல்லூர் ஒன்றிய முன்னாள் கவுன்சிலருமான டி.அறிவழகன் விருப்ப மனு வழங்கினார்.

இந்த நிகழ்வில் திருச்சி வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

விருப்ப மனு வினியோகம் வருகிற 23ம் தேதி வரை நடக்கிறது. விருப்ப மனு விநியோகம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.