பொறுப்பாளர்களிடம்,புதிய வரைவு வாக்காளர் பட்டியலை வழங்கி ஆலோசனைகளை வழங்கினார் திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமார்.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எஸ் ஐ ஆர் வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக, அதிமுக பாக நிர்வாகிகள் உடனான கலந்தாய்வு கூட்டம். பெல் அண்ணா தொழிற்சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் அவர்கள் நிர்வாகிகள் மற்றும் பூத் பாக கிளை பொறுப்பாளர்களிடம்,புதிய வரைவு வாக்காளர் பட்டியலை கொடுத்து நடைபெற உள்ள வாக்காளர் திருத்த கேம்ப் குறித்தும் அதில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆற்றவேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர்கள் இராவணன், எஸ்.கே. டி .கார்த்திக்,
நகர கழக செயலாளர் எஸ்.பி.பாண்டியன், பகுதி செயலாளர்கள் எம்.பாலசுப்ரமணியன், எஸ்.பாஸ்கர் கோபால்ராஜ், ஏ.தண்டபாணி, பேரூர் கழக செயலாளர் பி.முத்துக்குமார், அம்மா பேரவை செயலாளர் S.ராஜமணிகண்டன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் என்.கார்த்திக், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் சின்னதுரை, சம்பத்குமார் உள்ளிட அதிமுக நிர்வாகிகள் உடனிருந்து வாக்காளர் பட்டியலை பெற்றுக்கொண்டனர்.

