பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின்நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த பராமரிப்பு பணிகளின் போது சம்பந்தப்பட்ட மின் பாதைகளை சேர்ந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.இதுதொடர்பாக அப்பகுதி மக்களுக்கு முன்னறிவிப்பு மூலம் தகவல் தரப்படுவது வழக்கம். அதன்படி திருச்சி மாவட்டத்தில் நாளை (20.12.2025) சனிக்கிழமை பல்வேறு பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன்காரணமாக கீழ்க்காணும் பகுதிகளில் நாளை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி:
திருச்சி துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் மத்திய பஸ்நிலையம், வ.உ.சி.ரோடு, கலெக்டர் ஆபிஸ்ரோடு பகுதிகள், ராஜாகாலனி, குமுளித்தோப்பு, கல்லாங்காடு, பெரியமிளகுப்பாறை, ஜங்ஷன் பகுதிகள், வில்லியம்ஸ்ரோடு, ராயல்ரோடு, கண்டித்தெரு, கான்வெண்ட்ரோடு, பறவைகள் சாலை, பாரதியார்சாலை, மேலப்புதூர், குட்ஷெட்ரோடு, புதுக்கோட்டைரோடு, ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலம் பகுதி.
ஜென்னிபிளாசா பகுதி, தலைமை தபால்நிலைய பகுதி, முதலியார்சத்திரம், காஜாப்பேட்டை ஒரு பகுதி, உறையூர் பகுதிகளான மேட்டுத்தெரு, கல்நாயக்கன்தெரு, வாலாஜாபஜார், பாண்டமங்கலம், வயலூர்ரோடு, கனராபேங்க்காலனி, குமரன்நகர், சிண்டிகேட் பேங்க்காலனி, பேங்கர்ஸ்காலனி, சீனிவாசநகர், ராமலிங்கநகர், தெற்கு வடக்கு, கீதாநகர், அம்மையப்பபிள்ளைநகர், எம்.எம்.நகர், சண்முகாநகர், ரெங்காநகர், உய்யகொண்டான்திருமலை, கொடாப்பு, வாசன்நகர், சோழங்கநல்லூர், உறையூர் வெக்காளியம்மன்கோவில் பகுதி, பாத்திமாநகர், குழுமணிரோடு, நாச்சியார்கோவில், பொன்னகர், கருமண்டபம் இருபுறமும், செல்வநகர், ஆர்.எம்.எஸ்.காலனி, தீரன்நகர், பிராட்டியூர், ராம்ஜிநகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

திருவெறும்பூர் துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் திருவெறும்பூர், கூத்ததைப்பார்ரோடு, மலைக்கோவில், திருவெறும்பூர் தொழிற்பேட்டை, டி-நகர், பிரகாஷ்நகர், வேங்கூர், சோழமாநகர், சோழமாதேவி, புதுத்தெரு, கக்கன்காலனி, பர்மாநகர், நேருநகர், அண்ணாநகர்.நவல்பட்டு, போலீஸ்காலனி, காவேரிநகர், பாரத்நகர் 100 அடி சாலை, பூலாங்குடி, பழக்கனாங்குடி, கும்பக்குடி, சூரியூர், காந்தலூர், எம்.ஐ.இ.டி. குண்டூர் ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
முசிறி:
இதேபோல் முசிறியில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான முசிறி, சிங்காரச் சோலை, துறையூர் ரோடு, திருச்சி ரோடு, கைகாட்டி, புதிய பஸ் நிலையம், சந்தப்பாளையம், அழகப்பட்டி, ஹவுசிங் யூனிட், சிலோன் காலனி, வேளக்காநத்தம், சிந்தம்பட்டி, அலகரை, கோடியம்பாளையம், கருப்பனாம்பட்டி, மணமேடு, தொப்பலாம்பட்டி, அந்தரப்பட்டி, தண்டலைப்புத்தூர், காமாட்சிப்பட்டி, வடுகப்பட்டி, தும்பலம், மேட்டுப்பட்டி, முத்தம்பட்டி, சிட்டிலரை, திருஈங்கோய்மலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது

