வரும் ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் பாஜக மாநில தலைவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் அனைவரும் திரளாக கலந்து கொள்ள அதிமுக மாவட்ட பரஞ்ஜோதி அழைப்பு.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகம் தலை நிமிர தமிழனின் வெற்றி பயணம் மேற்கொள்ளும் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் அவர்கள் வரும் (21.12.2025, ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியளவில் புத்தூர் நால்ரோடு அருகில் சிறப்புரையாற்றுகிறார்.

மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எழுச்சி பயணம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க,

மேற்குறிப்பிட்டுள்ள நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அதிமுக நிர்வாகிகள்,தொண்டர்கள் என அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

