திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் உயிர் தொழில்நுட்பவியல் துறையின் சார்பாக மாநில அளவிலான பயோ பீஸ்ட் நிகழ்ச்சி
திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் கல்லூரியில் உயிர் தொழில்நுட்பவியல் துறையின் சார்பாக பயோ பீஸ்ட் (biofest) நிகழ்ச்சி இன்று செவ்வாய்க்கிழமை (16.12.2025 ) சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வு மாணவர்களின் இறை வேண்டல் பாடலுடன் தொடங்கித் துறை சார்ந்த குழுவினர் குத்துவிளக்கு ஏற்றினர். உயிர் தொழில் நுட்பவியல் துறை தலைவர் முனைவர் ஆர். ஜாஸ்மின் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். முனைவர் ஆர் சர்மிளா அவர்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.
இந்நிகழ்விற்குச் சிறப்பு விருந்தினராகக் கல்லூரியின் துணை முதல்வர் ஜெ.ஜி.ஆர்.சத்தியசீலன் அவர்கள் தலைமை தாங்கினார். மேலும் மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான விழாவினை தொடங்கி வைத்து சிறப்பித்து உரையாற்றினார். சிறப்பு விருந்தினருக்கு உரிய நினைவுப் பரிசைத் துறையின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சி. சிந்தியா அவர்கள் வழங்கினார். பேராசிரியர் எஸ். லீலாவதி இந்நிகழ்ச்சியைப் பற்றி மாணவர்களுக்கு விளக்கினார்.

இந்நிகழ்வில் பல கல்லூரிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கு பெற்றுப் பரிசுகளையும் பதக்கங்களையும் பெற்றுப் பயன் அடைந்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குரிய பரிசுகளைத் ஆர். ராஜசேகர் (founder and creativity director, Nigal event’s) விக்னேஷ் காந்தி (Vinan pictures Factory) இருவரும் வழங்கினர்.
அனைத்துப் போட்டிகளிலும் கலந்து கொண்டு முதல் பரிசினைத் திருச்சிராப்பள்ளி காவேரி மகளிர் கல்லூரி தட்டிச் சென்றது. இரண்டாம் நிலையில் திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரி தகுதி பெற்றது. மூன்றாம் நிலையில் திருச்சிராப்பள்ளி செயின்ட் ஜோசப் கல்லூரி இடம் பிடித்தது.

முனைவர் ஏ.அமிர்தா ஆனந்தி இந்நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார். மேலும் இந்நிகழ்ச்சிக்கு ஹெலிக்ஸ் அசோசியேசன் தலைவர் எஸ்.ஸ்ரீகா மற்றும் துணைத் தலைவர் கே.சிமார் ஆகியோரின் பங்கு குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் மா. வினித் இந்நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கி நன்றியுரை கூறினார்.
பிஷப் ஹீபர் கல்லூரி உயிர் தொழில் நுட்பவியல் துறையின் செறிவானதாக இந்நிகழ்ச்சி அமைந்தது குறிப்பிடத்தக்கது..

