எஸ் ஐ ஆர் திருத்த பணியில் துவாக்குடி பகுதியில் வசிக்காதவர்களை நீக்க வேண்டும் என திருச்சி தெற்கு மாவட்ட அதிமுகவினர் புகார் .
எஸ் ஐ ஆர் திருத்த பணியில் துவாக்குடி பகுதியில் வசிக்காதவர்களை நீக்க வேண்டும் என திருச்சி தெற்கு மாவட்ட அதிமுகவினர் தாசில்தாரிடம் புகார் மனு.
திருவெறும்பூர் தாசில்தார்யிடம் இன்று.துவாக்குடி அதிமுக நகர செயலாளர் எஸ்.பி .பாண்டியன் தலைமையில் புகார் மனு அளித்தனர் அந்த மனுவில்

துவாக்குடி பகுதியில் உள்ள பாய்லர் ஆலை வாக்குசாவடி எண்: 271-ல் அந்த பகுதியில் வசிக்காத சுமார் 71 நபர்களை அ.திமுக
பி எல் ஏ 2 வின்
விசாரனைப்படி மேற்க்கண்ட 71 நபர்களும் பாகம் எண் : 271 க்குள் இல்லை என்பது கண்டறிந்து மேற்க்கண்டவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க கூடாது என்று மனுவில் கூறி உள்ளனர்.

தாசில்தாரிடம் மனு அளித்த போது அதிமுக தெற்கு மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் சுரேஷ் குமார், செந்தில்குமார்
நாகூர்கனி, கவுன்சிலர் சாருமதி
குமார், மாடசாமி ,ஆகியோர் உடனிருந்தனர்.

