Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் உள்ள ஊராட்சிகள் உள்பட 8 மாவட்டங்களில் ஊராட்சிகள் 37 ஆக பிரிப்பு. பிரிக்கப்பட்டுள்ள ஊராட்சிகள் விபரம் ….

0

'- Advertisement -

ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைக்கும் நோக்கில், மாநில அளவில் உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

 

இக்குழுவின் வழிகாட்டுதலின் பேரில், பல்வேறு விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டன. மறுசீரமைப்பு தொடர்பான தகவல்களை சேகரிக்கும் பொருட்டு, மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து கருத்துருக்கள் பெறப்பட்டன. அவற்றை அடிப்படையாகக் கொண்டு, ஊராட்சிகள் புதிய வகைப்பாடுகளின் அடிப்படையில் மறுபிரிக்கப்பட்டுள்ளன.

 

தமிழகத்தின் செங்கல்பட்டு, கோவை, தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கரூர், சிவகங்கை, திருச்சி ஆகிய 8 மாவட்டங்களில் குக்கிராமங்கள் அதிகமாக இருப்பது, மக்கள் தொகை மற்றும் பரப்பளவு போன்ற காரணிகளை கருத்தில் கொண்டு, ஏற்கனவே இருந்த 17 கிராம ஊராட்சிகள், மொத்தம் 37 கிராம ஊராட்சிகளாக பிரிக்கப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சூனாம்பேடு ஊராட்சியில் மொத்தம் உள்ள 22 கிராமங்கள் சூனாம்பேடு இல்லீடு என இரண்டு ஊராட்சிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் தலா 11 கிராமங்கள் இடம்பெறும்.

 

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை ஒன்றியத்தில் 21 கிராமங்களை உள்ளடக்கிய புத்தாநத்தம் ஊராட்சியில் இருந்து 12 கிராமங்களுடன் இடையப்பட்டி ஊராட்சி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. புத்தாநத்தம் ஊராட்சியில் 9 கிராமங்கள் இடம்பெறும்.

 

இதேபோல, 24 கிராமங்களை உள்ளடக்கிய கண்ணுடையான்பட்டி ஊராட்சி இனி 12 கிராமங்களை உள்ளடக்கியதாக இருக்கும். முத்தபுடையான்பட்டி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட புத்தாநத்தம் ஊராட்சியில் 12 கிராமங்கள் இடம்பெறும்.

 

இதேபோல, 8 கிராமங்களை உள்ளடக்கிய திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிருஷ்ணசமுத்திரம் கிராம ஊராட்சி இனி 7 கிராமங்களை உள்ளடக்கியதாக இருக்கும். உருவாக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட செம்மங்குளம் ஊராட்சியில் ஒரு கிராமம் இடம்பெறும்.

இதேபோல, 11 கிராமங்களை உள்ளடக்கிய மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இனாம்குளத்தூர் ஊராட்சி இனி 2 கிராமங்களை உள்ளடக்கியதாக இருக்கும். உருவாக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட ஆலம்பட்டி புதூர் ஊராட்சியில் 9 கிராமங்கள் இடம்பெறும்.

 

சிவகங்கை மாவட்டத்தில் 4 கிராமங்களை உள்ளடக்கிய கல்லல் ஊராட்சி இரண்டாக பிரிக்கப்பட்டு கல்லல் வடக்கு ஊராட்சியில் 3 கிராமங்களும், கல்லல் தெற்கில் ஒரு கிராமும் இடம்பெறும்.

 

கோவை மாவட்டத்தில், 9 கிராமங்களை உள்ளடக்கிய ஆனைமலை ஒன்றியம், திவான்சாபுதூர் ஊராட்சி இரண்டாக பிரிக்கப்பட்டு திவான்சாபுதூர் ஊராட்சி ஊராட்சியில் 5 கிராமங்களும், கணபதிபாளையம் ஊராட்சியில் 4 கிராமங்களும் இடம்பெறும்.

 

அண்ணூர் ஊராட்சி ஒன்றியத்தில் 7 கிராமங்களை உள்ளடக்கிய மசக்கவுண்டன்செட்டிபாளையம் கிராம ஊராட்சி, மசக்கவுண்டன்செட்டிபாளையம் (4 கிராமங்கள்), ஓரைக்கால்பாளையம் (3 கிராமங்கள்) என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன.

 

இதேபோல,3 கிராமங்களை உள்ளடக்கிய மதுக்கரை ஒன்றியம், மயிலேறிபாளையம் ஊராட்சி இரண்டாக பிரிக்கப்பட்டு மயிலேறிபாளையம் ஊராட்சியில் ஒரு கிராமமும், ஏமூர் ஊராட்சியில் 2 கிராமங்களும் இடம்பெறும்.

 

இதேபோல, 9 கிராமங்களை உள்ளடக்கிய பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், பிளிச்சி ஊராட்சி இரண்டாக பிரிக்கப்பட்டு பிளிச்சி ஊராட்சியில் 4 கிராமங்களும், ஒன்னிபாளையம் ஊராட்சியில் 5 கிராமங்களும் இடம்பெறும்.

 

இதேபோல 5 கிராமங்களை உள்ளடக்கிய பன்னிமடை ஊராட்சி இரண்டாக பிரிக்கப்பட்டு பன்னீர்மடை ஊராட்சியில் 3 கிராமங்களும், கணுவாய் ஊராட்சியில் 2 கிராமங்களும் இடம்பெறும்.

 

இதேபோல 5 கிராமங்களை உள்ளடக்கிய முத்துக்கவுண்டனூர் ஊராட்சி இரண்டாக பிரிக்கப்பட்டு முத்துக்கவுண்டனூர் ஊராட்சியில் 3 கிராமங்களும், முதலிபாளையம் ஊராட்சியில் 2 கிராமங்களும் இடம்பெறும்.

 

தர்மபுரி மாவட்டத்தில், 18 கிராமங்களை உள்ளடக்கிய நல்லம்பள்ளி ஒன்றியம், மானியதஹள்ளி ஊராட்சி இரண்டாக பிரிக்கப்பட்டு மானியதஹள்ளி (ஜகுரு) ஊராட்சி ஊராட்சியில் 10 கிராமங்களும், கீழீசல்பட்டி ஊராட்சியில் 8 கிராமங்களும் இடம்பெறும்.

 

திண்டுக்கல் மாவட்டத்தில், 16 கிராமங்களை உள்ளடக்கிய ஆத்தூர் ஒன்றியம், சித்தரேவு ஊராட்சி இரண்டாக பிரிக்கப்பட்டு சித்தரேவு ஊராட்சி ஊராட்சியில் 7 கிராமங்களும், சிங்காரகோட்டை ஊராட்சியில் 9 கிராமங்களும் இடம்பெறும்.

 

குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் 35 கிராமங்களை உள்ளடக்கிய ஆர்.கோம்பை கிராம ஊராட்சி, ஆர்.கோம்பை (18 கிராமங்கள்), சின்னழகுநாயக்கனூர் (17 கிராமங்கள்) என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன.

 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 16 கிராமங்களை உள்ளடக்கிய சேந்தமங்கலம் கிராம ஊராட்சி, சேந்தமங்கலம் (3 கிராமங்கள்), மைலங்குப்பம் (4 கிராமங்கள்), பெரியமாரனோடை (3 கிராமங்கள்), பெரியகுப்பம் (4 கிராமங்கள்), சின்னக்குப்பம் (2 கிராமங்கள்) என 5 ஊராட்சிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

 

கரூர் மாவட்டத்தில், கடவூர் ஊராட்சி ஒன்றியத்தில் 34 கிராமங்களை உள்ளடக்கிய கடவூர் ஊராட்சி, இடையப்பட்டி கிழக்கு (23 கிராமங்கள்), கடவூர் மேற்கு (11 கிராமங்கள்) என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.