திருச்சியில் ஆன்லைன் லாட்டரி
விற்ற 2 பேர் கைது. பணம், செல்போன் பறிமுதல்.

திருச்சி தென்னூர் ஆழ்வார்தோப்பு காய்தே மில்லத் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அலி
( வயது 52 ) , ஆழ்வார் தோப்பு ஜாகிர் உசேன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் எலியாகத் அலி (வயது 66) இவர்கள் இரண்டு பேரும் காயிதே மில்லத் நகர் ஜங்ஷன் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்தனர்( அதாவது காலையில் நம்பர் எழுதிக் கொண்டு மாலையில் வின்னிங் தருவது ) இது பற்றி தகவல் அறிந்த தில்லை நகர் காவல் நிலையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் லாட்டரி நம்பர் எழுதும் இடத்திற்கு விரைந்து சென்று அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்தனர்.


பின்னர் அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டு நம்பர்கள் அடங்கிய காகிதத்தை கைப்பற்றினர் .மேலும் ரூபாய் 2000 பணம் மற்றும் ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

