திருச்சி எடமலைப்பட்டி புதூரில்
இளம் பெண்களை வைத்து வீட்டில் விபச்சாரம்: அழகிகள் உள்பட 4 பேர் கைது.

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசாருக்கு 
அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் ஸ்டீபன் தன்ராஜ் இந்தப் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக புகார் அளித்தார் . அந்த புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ கணேஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று அங்கு சோதனை மேற்கொண்டனர் .

அப்போது பெரம்பலூர் மாவட்டம் துறையூர் ரோடு சின்ன தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்த அன்புசாமி மனைவி மகாலட்சுமி (வயது 39) என்பவர் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 31 வயது இளம்பெண் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 37 வயது இளம்பெண் ஆகியோரை வைத்து விபச்சாரம் செய்து வந்தது தெரிய வந்தது.
பின்னர் போலீசார் மகாலட்சுமி மற்றும் அந்த வீட்டை வாடகைக்கு விட்ட அதன் உரிமையாளர் எடமலை பட்டிப்புதூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பிரசாந்த் (வயது 26) ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர். விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட இரண்டு பெண்களையும் மீட்டு காஜாமலையில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர் .மேலும் கைதானவர்களிடம் 4 ஆண்ட்ராய்டு செல்போன்கள் ரூபாய் 5 ஆயிரத்து 200 பணம் ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

