ரூ.1.97 கோடி மோசடி செய்த திருச்சி TSN Econtech International Private Limited நிறுவன இயக்குனர்கள் 5 பேருக்கு சிறை தண்டனை .இதில் ஒருவர் அதிமுக பிரமுகர் .
ரூ.1.97 கோடிக்கு உயர்ரக செல்போன்கள் வாங்கி காசோலை மோசடி செய்த புகாரில் திருச்சியை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் 3 இயக்குநர்களுக்கு சென்னை நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கி உள்ளது.
அதுமட்டுமின்றி ரூ.1.97 கோடியை ஆண்டுக்கு 6 சதவீத வட்டியுடன் திரும்ப வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

சென்னையில் ரெடிங்டன் லிமிடெட் (Redington Limited) என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் உலகளவில் சப்ளை செயின் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா உள்பட பல இடங்களில் செயல்பட்டு வரும் நிறுவனங்களுக்கு ஐடி துறை சார்ந்த சேவைகள், செல்போன்களை வழங்கி வருகிறது.
திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட *TSN Econtech International Private Limited* என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக திருச்சியை சேர்ந்த சிராஜூதீன் என்ற தொட்டப்பா, விக்னேஷ் ஆசை தம்பி, சண்முகராஜ் முரளி சுந்தரம் உள்ளிட்டவர்கள் உள்ளனர்.

இவர்கள் ரெடிங்டன் லிமிடெட் நிறுவனத்திடம் பல்வேறு தேதிகளில் விலை உயர்ந்த செல்போன்களை வாங்கி இருந்தனர் .. இதன் மதிப்பு ரூ.1.97 கோடியாகும். இதற்கான பணத்தை இவர்கள் நிறுவனம் கொடுக்காமல் இழுத்தடித்தது. அதன்பிறகு ரூ.68.46 லட்சம், ரூ.1.24 கோடி, ரூ.4.65 லட்சம் மதிப்பிலான 3 காசோலைகளை 2017 மே மாதம் வழங்கியது. இந்த காசோலைகளை வங்கியில் வழங்கியபோது அது பணம் இன்றி திரும்பியது. இதையடுத்து ரெடிங்டன் நிறுவனம் பணத்தை மீண்டும் தரும்படி நோட்டீஸ் அனுப்பியது.

ஆனால் திருச்சி நிறுவனம் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதையடுத்து ரெடிங்டன் நிறுவனம் சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள 5வது விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் TSN Econtech Internationa Private Limited என்ற நிறுவனம் முதல் குற்றவாளியாகவும், அதன் இயக்குநர்களான திருச்சியை சேர்ந்த சிராஜூதீன் 2வது குற்றவாளியாகவும், விக்னேஷ் ஆசை தம்பி 3வது குற்றவாளியாகவும், சண்முகராஜ் முரளி சுந்தரம் 4வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டது.
இந்த வழக்கு கடந்த 8 ஆண்டுகளாக உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை கடந்த அக்டோபர் 3ம் தேதி முடிந்தது. தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இப்போது வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி குற்றம்சாட்டுக்கு உள்ளான நிறுவனம், 3 இயக்குநர்கள் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டன. மேலும் 3 இயக்குநர்களுக்கும் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
அதன்படி நிறுவனத்தின் இயக்குநர்களான சிராஜூதீன், விக்னேஷ் ஆசை தம்பி, சண்முகராஜ் முரளி ஆகியோருக்கு தலா ஓராண்டு சாதாரண சிறை தண்டனை வழங்கப்பட்டது. மேலும் ரூ.1.97 கோடியை ரெடிங்டன் லிமிடெட் நிறுவனத்துக்கு ஆண்டு வட்டியாக வட்டியுடன் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு கடந்த டிசம்பர் 6ம் தேதி வழங்கப்பட்டு உள்ளது.
சிறை தண்டனை பெற்றுள்ள சிராஜூதீன் அதிமுக பிரமுகர் என்று கூறப்படுகிறது. இவர் இதுபோல் பல நிறுவனங்களையும், பல வங்கிகளையும் ஏமாற்றி மோசடி செய்துள்ளார். இவர் மீது சிபிஐ மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதுமட்டுமின்றி ரியல் எஸ்டேட் தொழில் மூலமாகவும் பணமோசடி செய்ததாக புகார்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

