திருச்சி சுப்பிரமணியபுரத்தில் துணிகரம் : மளிகை கடையின் பூட்டை உடைத்து ஒர் லட்சம் பணம் கொள்ளை. தெருவுக்குள் பெருகிவரும் கஞ்சா, போதை ஆசாமிகள் நடமாட்டம். பொதுமக்கள் அச்சம் .
திருச்சி சுப்பிரமணியபுரத்தில் துணிகரம் :
மளிகை கடையில் பூட்டை உடைத்து ஒர் லட்சம் பணம் கொள்ளை.
வாலிபர் கைது:

திருச்சி சுப்பிரமணியபுரம் ரஞ்சிதபுரம் சூசை தெருவை சேர்ந்தவர் சௌந்தரபாண்டியன் (வயது 70). இவர் சுப்பிரமணியபுரம் ராஜா தெரு மெயின் ரோடு ரஞ்சிதபுரத்தில் பாண்டியன் சிறிய அளவிலான மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலையில் மீண்டும் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளேசென்று பார்த்தபோது கடையில் ( ஊரிலிருந்து வங்கியில் போட சொல்லி அனுப்பி வைத்த பணம் ரூ.2 லட்சம்.) இருந்த ஒரு லட்சம் பணம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து சவுந்தரபாண்டியன் கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் கே.கே நகர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருடியது தெரியவந்தது. விசாரணையில் அவர் சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த அஜய் குமார் (வயது 19) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து ஒரு லட்சம் ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
ரஞ்சிதாபுரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து இந்த திருட்டு சம்பவம் நடந்த கடையின் அருகே உள்ள வள்ளுவர் தெரு , கென்னடி தெரு , கணபதி தெரு , இளங்கோதெரு போன்ற பெருக்களுக்கு செல்லும் பொதுமக்கள் இந்தப் பகுதியை கடந்து தான் சொல்ல வேண்டும் . தினமும் மாலை இருட்ட தொடங்கும் நேரம் முதல் நள்ளிரவு வரை சில சுள்ளான்கள் கஞ்சா மற்றும் மது போதையில் திரிவதால் பொதுமக்கள் அச்சத்துடன் தான் இந்த தெருகளுக்குள் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. தற்போது இரண்டு நாட்களாக காவல்துறை பாதுகாப்பு வாகனம் நிற்பதால் இந்த தொல்லை இல்லை . தினமும் காவல்துறை ரவுண்ட்ஸ் வந்தால் இந்த தொல்லை இருக்காது என்பதே அப்பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பு .

