தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தொழிற்சங்க தேர்தல் குறித்த அண்ணா தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் .மாவட்ட செயலாளர்கள் பங்கேற்பு .
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தொழிற்சங்க தேர்தல் குறித்த அண்ணா தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் .மாவட்ட செயலாளர்கள் பங்கேற்பு .


தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தொழிற்சங்க அங்கீகார தேர்தல் வருகிற 10-ஆம் தேதி புதன்கிழமை மண்டல அலுவலகத்தில் நடைபெற உள்ளது இது குறித்து அண்ணா தொழிற்சங்கம் பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள அண்ணா தொழிற்சங்க அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது, கூட்டத்திற்கு பேரவை மாநிலத் தலைவர் தாடி ராசு தலைமை தாங்கினார்.
தேர்தல் ஒருங்கிணைப்பாளர் திருச்சி மண்டல செயலாளர் ராஜேந்திரன் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் குமார்,பரஞ்ஜோதி, சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்து ஆலோசனை வழங்கி பேசினார்கள்.
கூட்டத்தில் மாவட்ட தொழிற்சங்க செயலாளர்கள் பாஸ்கரன், ராஜேந்திரன், கார்த்தி மற்றும் போக்குவரத்து பிரிவு மண்டல செயலாளர் தர்மராஜ், பெல் அண்ணா தொகுதி சங்க செயலாளர் மின்வாரிய அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பழனியப்பன், ராஜா, குமார், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அன்புச் செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் போக்குவரத்து பிரிவு முன்னாள் மண்டல செயலாளர் ஜெகதீசன் நன்றி கூறினார்.கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் ரஜினிகாந்த், ராஜேந்திரன், என்ஜினியர் ரமேஷ்,
,வெங்கட் பிரபு,சமயபுரம் ராமு, முத்துக்கருப்பன்,ஜெயக்குமார், அன்பரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

