ஜெயலலிதாவின் நினைவு நாளில் அனைவரும் புகழஞ்சி செலுத்திட திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமார் வேண்டுகோள்
திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப. குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

அதிமுகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க
வரும் வெள்ளிக்கிழமை(டிச.5) மறந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 9.ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்தில்
அன்று காலை 9.00 மணியளவில் பெல் (BHEL ) அண்ணா தொழிற்சங்க வளாகம் அருகில்
இதய தெய்வங்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்.. புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது சிலை மற்றும் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது.

அதனைத் தொடர்ந்து காலை 10.00 மணி அளவில்.. லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லால்குடி பேருந்து நிலையம் அருகிலும்
காலை 11.00 மணியளவில், மணப்பாறை சட்டமன்ற தொகுதி, மணப்பாறை பேருந்து நிலையம் அருகிலும் அம்மா அவர்களின் நினைவு நாள் அனுசரிக்கப்பட உள்ளது.
அது சமயம் நம் கட்சியின் செயல்வீரர்களும், வீராங்கனைகளும் கழகத்தின் அனைத்து நிலைகளில் உள்ள நிர்வாகிகளும் தொண்டர்களும் தவறாமல் பங்கேற்று அம்மா ஜெயலலிதா அவர்களுக்கு புகழ் அஞ்சலி செலுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் கழகத்தினர் அனைவரும் அவரவர் வசிக்கும் பகுதிகளில் இதயதெய்வம் அம்மா அவர்களின் திருவுருவ படங்களை வைத்து நினைவஞ்சலி செலுத்திட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
என திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அஇஅதிமுக. மாவட்ட செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப. குமார் வெளியீட்டு உள்ள அறிக்கையில் கூறியுள்ளார் .

