கல்லூரி மாணவியை பஸ்லயே முதலில் பின் 2 நாட்கள் மிரட்டி ? மீண்டும் மீண்டும் பலாத்காரம் செய்த டிரைவர் .
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் 21 வயது மகள் கோவையில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் எம்எஸ்சி இறுதி ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த 4 மாதங்களுக்கு முன் அந்தக் கல்லூரி மாணவி தனது தாயாருடன் கோவைக்கு ஆம்னி பேருந்து ஒன்றில் சென்றுள்ளார். களியக்காவிளை பகுதியைச் சேர்ந்த அனீஸ் (வயது 36) என்பவர் அந்தப் பேருந்தின் ஓட்டுனராக இருந்தார். அவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

ஓட்டுனர் அனீஸ் அந்தக் கல்லூரி மாணவி மற்றும் அவரது தாயாரிடம் பாசமாக பேசி எந்த உதவி வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள் என பேருந்து நிறுத்தும் இடங்களில் எல்லாம் உதவிகளை செய்துள்ளார். மேலும் மாணவியின் தாயாரிடம், ‘மாணவி எனது மகளைப் போன்றவர்’ எனக் கூறியுள்ளார். ‘கோவையில் கல்லூரிக்கு சென்று வர தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருகிறேன், நீங்கள் சிரமப்பட வேண்டாம்’ என அக்கறை கலந்த அனிஷின் பேச்சை நம்பிய அந்தக் கல்லூரி மாணவியும் விடுமுறையில் ஊருக்கு வரும் போதெல்லாம் அனீஸ் ஓட்டுநராக வந்த பேருந்திலேயே வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 9ஆம் தேதி அனீஸ் ஓட்டிய ஆம்னி பேருந்தில் கோவையிலிருந்து தக்கலைக்கு வருவதற்காக மாணவி ஏறியுள்ளார். படுக்கை வசதி கொண்ட அந்த பேருந்தில் மாணவி தூங்கியபடி வந்து கொண்டு இருந்தார். அப்போது மாணவியை தட்டி எழுப்பிய அனீஸ், பசிக்குதுனா இந்த பிஸ்கட்டை சாப்பிடு என கொடுத்துள்ளார். அதை வாங்கி சாப்பிட்ட மாணவி மயக்கம் அடைந்துள்ளார். பின்னர் மறுநாள் காலை, பேருந்து தக்கலை வந்து சேர்ந்ததும், ‘நம் இருவருக்கும் நேற்றிரவே எல்லாம் முடிந்து விட்டது’ என அனீஸ் கூறியிருக்கிறார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த கல்லூரி மாணவி, அனீஸ் தனக்கு மயக்கு பிஸ்கட் கொடுத்ததும் அதை சாப்பிட்ட பின் மயங்கியிருப்பதும், அவர் தன்னை பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. இதனால் கதறி அழுத மாணவி இது பற்றி நான் எனது பெற்றோரிடம் கூறுவேன் என தெரிவித்ததற்கு கத்தியைக் காட்டி மிரட்டிய அனீஸ், ‘ உன்னையும் உன் குடும்பத்தில் உள்ளவர்களையும் கொலை செய்து விடுவேன். நேற்று இரவு நடந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து வைத்துள்ளேன்’ எனவும் கூறி மிரட்டி இருக்கிறார்.
இதனால் அச்சமடைந்த அந்த மாணவி இது பற்றி தனது தாயார் உட்பட யாரிடமும் கூறவில்லை. இதனை தனக்கு சாதமாக பயன்படுத்திக் கொண்ட அனீஸ், மாணவியிடம் தனியாக பேச வேண்டும் என 2 நாட்கள் வெளியே அழைத்துச் சென்று அவரை மீண்டும் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். அதனை வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்.
ஒரு கட்டத்தில் மாணவி இது பற்றி தனது தாயாரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சடைந்த மாணவியின் தாயார் இது பற்றி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அனீஷை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.

